ஜெனீலியா-சிம்பு-கெட்டவன்!

By Staff

Lekha
கிடப்பில் போடப்பட்டுள்ள கெட்டவன் படத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்துள்ளார் சிம்பு.

சிம்பு நடிக்க, அவருடன் லேகா வாஷிங்டன், நமீதா ஆகியோர் இணைந்து நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் கெட்டவன். ஆனால் லேகாவின் நடிப்பில் திருப்தி வராததால் அவரையும் தூக்கி விட்டு, படத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கெட்டவன் படத்தை சிம்பு கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. லேகாவுக்குப் பதில் தற்போது ஜெனீலியாக நாயகியாக புக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்பட்டவர்தான் ஜெனீலியா. ஆனால் சமீபத்தில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெனீலியாவுக்கு தமிழில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜெனீலியாவை தனது படத்தில் போட விரும்பிய சிம்பு தரப்பு அவரை அணுகியுள்ளது. அவரும் ஓ.கே. சொல்லி விட்டதாக தெரிகிறது.

இப்படத்தின் 50 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்ட நிலையில், ஆடியோ வெளியாகவிருந்த நிலையில் படம் கிடப்பில் போடப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் படத்தின் கதையால் கவரப்பட்ட சிம்பு, மீண்டும் படத்தைத் தொடர விரும்பினார். இந்த முறை படத்தையும் அவர் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X