விஷாலுக்கு வயது 32

செல்லமே மூலம் நடிக்க வந்த விஷால் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஆனால் சமீப காலமாக அவரது படங்கள் ஹிட் ஆகத் தவறி வருகின்றன. கடுமையாக உழைத்தும் கூட படங்கள் சரிவரப் போகாததால் அப்செட் ஆகாமல் தொடர்ந்து தனது பாதையில் அயராமல் நடை போட்டுக் கொண்டிருக்கிறார் விஷால்.
இந்த நிலையில் நேற்று விஷாலுக்கு 32வது பிறந்த நாள். இதை, தற்போது தான் நடித்து வரும் தீராத விளையாட்டுப் பிள்ளை படப்பிடிப்பின்போது கொண்டாடினார் விஷால்.
பிறந்த நாள் கேக் வரவழைக்கப்பட்டு அதை விஷால் வெட்டினார். ஹீரோயின் நீத்து சந்திரா, கேக்கை எடுத்து விஷாலுக்கு ஊட்ட, அவரோ வெட்கப்பட ஒரே களேபரமாகி விட்டதாம்.
இயக்குநர் திரு, கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் படக் குழுவினர் விஷாலுக்கு வாழ்த்துக் கூறினர்.
Comments
கொண்டாட்டம் சினிமா தமிழ் தீராத விளையாட்டுப் பிள்ளை பிறந்த நாள் விஷால் birth day bash cinema theeratha vilayattu pillai vishal


Click it and Unblock the Notifications