»   »  24, எஸ்3யைத் தொடர்ந்து... ரஞ்சித்துடன் சூர்யா இணையும் படத்தின் தலைப்பு ‘5.35’?

24, எஸ்3யைத் தொடர்ந்து... ரஞ்சித்துடன் சூர்யா இணையும் படத்தின் தலைப்பு ‘5.35’?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு 5.35 எனப் பெயரிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கிய கபாலி படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது புதிய பட வேலைகளைத் துவக்கி விட்டார் ரஞ்சித்.

ஆம், இப்படத்தில் சூர்யா தான் நாயகன். ஏற்கனவே கார்த்தியை வைத்து ரஞ்சித் மெட்ராஸ் படத்தை இயக்கியபோதே, அடுத்து சூர்யா தான் அவரது நாயகன் எனக் கூறப்பட்டது. ஆனால், இடையில் ரஜினிக்கு படம் பண்ண ரஞ்சித் சென்று விட்டதால், அந்த படம் தள்ளிப் போனது.

5.35 title for Suriya & Pa Ranjith’s next?

தற்போது கபாலி வெற்றிகரமாக ஓடி வருவதால், சூர்யாவும், ரஞ்சித்தும் தங்களது பட வேலைகளை ஆரம்பித்து விட்டனர். இப்படத்தில் சூர்யா பாக்ஸராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்திற்கு 5.35 எனப் பேர் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஏன் இந்தப் படத்திற்கு 5.35 எனப் பெயர் வைக்க முடிவு செய்தனர் என்பது குறித்து தகவல்கள் இல்லை. சமீபகாலமாக சூர்யா தனது படப்பெயர்களில் நம்பர் இருக்கும்படி அமைத்து வருகிறார்.

24, பசங்க 2வைத் தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம் பட மூன்றாம் பாகத்திற்கு எஸ்.3 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
According to the latest update, the makers are finalizing the memorable title for Suriya’s movies which is unique that is ‘5.35’ for this upcoming drama. The official confirmation is awaited.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil