51 ஆண்டுகள், 5 மொழிகள், 421 திரைப்படங்கள், 3 தேசிய விருதுகள்: ரியல் மெகா ஸ்டார் மம்முட்டி!

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் மம்முட்டி.

திரையுலகில் 51 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள மம்முட்டிக்கு, பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 51 ஆண்டுகளில் 5 மொழிகளில் மொத்தம் 421 படங்களில் நடித்து பெரும் சாதனை படைத்துள்ளார் மம்முட்டி.

முகம்மது குட்டி என்ற மம்முட்டி

முகம்மது குட்டி என்ற மம்முட்டி

மம்முட்டியின் இயற்பெயர் முகம்மது குட்டி. மம்முட்டியின் பெயர் மட்டுமே குட்டியாக இருந்ததே தவிர, அவரின் மனிதம், திறமை, சாதனைகள் என எல்லாமே இங்கு எல்லைகள் இல்லாமல் விரிந்துக் கிடக்கின்றன. வறுமைக்கும் தேடலுக்கும் இடையில் தொடங்கிய மம்முட்டியின் சினிமா பயணம், அவரை இன்று ரியல் மெகா ஸ்டாராக மாற்றி அழகுப் பார்த்துள்ளது.

ஜூனியர் ஆர்டிஸ்ட் மம்முட்டி

ஜூனியர் ஆர்டிஸ்ட் மம்முட்டி

1971ல் வெளியான 'அனுபவங்கள் பாலிச்சகள்' என்ற படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தைத் தொடங்கியவர் தான் மம்முட்டி. தொடர்ந்து 'காலச்சக்கரம்' போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். ஆனால், அது எதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. பின்னர், மம்முட்டி நடித்த 'தேவலோகம்' படம் பல காரணங்களால் வெளியாகவில்லை. அதனையடுத்து, 1980ல் எம்.டி. வாசுதேவன் இயக்கத்தில் வெளியான 'வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள்' திரைப்படம், மம்முட்டிக்கு பெரிய தொடக்கமாக இருந்தது எனலாம்.

ஹீரோவாக அசத்திய மம்முட்டி

ஹீரோவாக அசத்திய மம்முட்டி

தொடர்ந்து வெளியான மேலா, திருஸ்னா போன்ற படங்கள் மம்முட்டிக்கு ஹீரோ அடையாளத்தை பெற்றுத்தந்தது. அதன் பின்னர் மம்முட்டி நடித்த படங்கள் ஒவ்வொன்றும் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அஹிம்ச, யவனிகா, கூடேவிதே, ஆ ராத்திரி, ஆள்கூட்டத்தில் தனியே, ஆதியொழுக்குகள், யாத்திரா, நிறக்கூட்டு, தனியாவர்தனம், நியூ டெல்லி, சிபிஐ டைரி குறிப்பு, ஜகார்த்தா, சேதுராம ஐயர் சிபிஐ, நேரரியன் சிபிஐ, அக்ஷரங்கள், சுக்ரதம் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

கோலிவுட்டிலும் வலம்வந்த மெகா ஸ்டார்

கோலிவுட்டிலும் வலம்வந்த மெகா ஸ்டார்

மமுட்டிக்கு கேரளாவை அடுத்து, தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முதலில் 'மெளனம் சம்மதம்' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த மம்முட்டி, அடுத்து 'அழகன்' படத்தில் தமிழ் ரசிகைகளை வசீகரித்தார். அலட்டிக் கொள்ளாத நடிப்பும், எளிமையான அவரது உடல் மொழியும் மம்முட்டியின் அக்மார்க் முத்திரை என ரசிகர்கள் கூறுவதுண்டு.

தளபதி செய்த மேஜிக்

தளபதி செய்த மேஜிக்

மலையாளத்தில் மம்முட்டி நடித்த படங்களில் 'ராஜமாணிக்கம்' ரொம்பவே முக்கியமானது. கமர்சியலாக தூள் கிளப்பிய இந்தப் படத்தில், மம்முட்டியின் அதகளமான நடிப்பை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து நின்றனர். அதைவிடவும் எக்ஸ்ட்ரா எனர்ஜியை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து தமிழில் நடித்த 'தளபதி' படத்தில் காட்டினார் மம்முட்டி. மணிரத்னம், ரஜினி, மம்முட்டி, இளையராஜா என இக்கூட்டணி நிகழ்த்திய மேஜிக்கில், மம்முட்டி தான் இதன் உயிர்நாடி என்பது ரசிகர்கள் அறிந்ததே.

5 மொழிகளிலும் அசரடித்தவர்

5 மொழிகளிலும் அசரடித்தவர்

தமிழில், கிளி பேச்சு கேட்கவா, ஆனந்தம், எதிரும் புதிரும், மக்கள் ஆட்சி, மறுமலர்ச்சி என பல படங்களில் நடித்துள்ள மம்முட்டி, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் கன்னங்களில் கை வைத்து, ரசிகர்களை உருக வைத்திருப்பார். இப்படி தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னட மொழிப் படங்களிலும் தனது தேர்ந்த நடிப்பால் தனித்து நின்றுள்ளார்.

3 தேசிய விருதுகள்

3 தேசிய விருதுகள்

1989ல் ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான 'வடக்கன் வீரக்கதா', 1990ல் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ரிலீஸான 'மதிலுகள்' படங்களை குறிப்பிடாமல், மம்முட்டியின் திரைப்பயணத்தை கடந்துவிட முடியாது. இந்த இரண்டு படங்களும் அவருக்கு முதல் தேசிய விருதை பெற்றுத்தந்தன. பின்னர், 1994ல்'பொந்தன் மாடா', 'விதேயன்' படங்கள் இரண்டாவது தேசிய விருதையும், 'டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார்' திரைப்படம் மூன்றாவது தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

பாத்திரங்களின் வலிமை அறிந்தவர்

பாத்திரங்களின் வலிமை அறிந்தவர்

மலையாள திரையுலகின் முதல் வெற்றியே அவர்கள் கதையை மட்டுமே திரையில் முன்னிலைப்படுத்துவது தான். அதை அங்கிருக்கும் அனைத்து நடிகர்களும் அறிந்திருந்தனர், மம்முட்டியும் அதனை மட்டுமே தனது படங்களில் பிரதிபலித்தார். தனது கேரக்டருக்கு என்ன தேவையோ அதில் எந்த சமரசங்களும் இல்லாமல், தன்னை இயக்குநர்களின் கைகளில் ஒப்படைத்துவிடுவார். அதுவே அவரது இத்தனையாண்டு கால வெற்றிப் பயணத்தின் சாட்சியாக உள்ளது. இதற்கு உதாரணமாக சில வருடங்களுக்கு முன்னர் வெளியான 'பத்தேமாரி' படத்தைக் குறிப்பிடலாம்.

என்றும் எளிமை எதிலும் அமைதி

என்றும் எளிமை எதிலும் அமைதி

ஆர்ப்பாட்டமே இல்லாத ஒரு மகா கலைஞனான மம்முட்டி, இன்றும் இளம் நடிகர்களுக்குப் போட்டியாக பல படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவரது நடிப்பில் 'நண்பகல் நேரத்து மயக்கம்', 'ரோர்ச்சா' படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. அதேபோல் என்றும் யாரிடத்தும் எளிமையாக அவர் பழகும் விதம், அவரை இன்னும் மெகா ஸ்டாராக பார்த்து வியக்க வைக்கிறது. இந்நிலையில், திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள மம்முட்டிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X