twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆல் இஸ் வெல்.. அமீர்கான் பற்றி தெரியாத 7 சுவாரஸ்ய தகவல்கள்.. பர்த்டே ஸ்பெஷல்!

    |

    மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரும், இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவருமான அமீர்கானின் 55வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    லகான், தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ், பிகே, தங்கல் என உலகளவில் புகழ்பெற்ற பல படங்களில் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் ஆஸ்கர் விருது பெற்ற லால் சிங் சத்தா படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

    அமீர்கான் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. இங்கே அவற்றுள் சிறப்பு வாய்ந்த 7 தகவல்கள் குறித்து பார்ப்போம்.

    8 வயதில்

    8 வயதில்

    1973ம் ஆண்டு வெளியான 'யாதோன் கி பாரத்' திரைப்படத்தில் முதன் முறையாக சினிமாவில் ஒரு சின்ன ரோலில் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். தனது மாமாவான நசீர் உசைன் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் நடிக்கும் போது அமீர்கானுக்கு வெறும் 8 வயது தான். வாலிப பருவத்தில் அமீர்கான் நடித்த 'ஹோலி' திரைப்படம் 1984ம் ஆண்டு வெளியானது.

    முதல் மனைவி

    முதல் மனைவி

    அமீர்கானின் முதல் மனைவியின் பெயர் ரீனா தத்தா. 1986ம் ஆண்டு ரீனாவை மணமுடித்த அமீர்கான், 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2002ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த தம்பதியினருக்கு, ஜுனைத் கான் மற்றும் இரா கான் என இரு குழந்தைகள் உள்ளனர். 2005ம் ஆண்டு கிரண் ராவை மணம் செய்து கொண்ட அமீர்கான் தற்போது அவருடன் தான் வாழ்ந்து வருகிறார்.

    ரியல் லைஃப் புன்சுக் வாங்குடு

    ரியல் லைஃப் புன்சுக் வாங்குடு

    ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், மாதவன், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த 3 இடியட்ஸ் படத்தில், புன்சுக் வாங்குடு என்கிற கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருப்பார். அதே போன்ற கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையிலும் இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்று. சோனம் வாங்சக் எனும் பொறியாளரின் கதையைத் தான் அமீர்கான் கதாபாத்திரத்திற்கு வடிவமைத்திருந்தனர்.

    தல அஜித் போல

    தல அஜித் போல

    ஒவ்வொரு விருது விழாவிலும் தல அஜித் பெயரை பயன்படுத்தி பலரும் கைதட்டல்கள் வாங்குவார்கள். ஆனால், அஜித் விருது விழாக்களை ரொம்ப காலமாக புறக்கணித்து வருகிறார். அதே போல, நடிகர் அமீர்கானும் விருது விழாக்களை வெகு காலமாக புறக்கணித்து வருகிறார். ஆஸ்கர் விருதுக்கு அமீர்கானின் லகான் படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கார்கள் மீது ஆசை

    கார்கள் மீது ஆசை

    உலகளவில் பல பிரபலங்களுக்கு இருக்கும் கார்கள் மீதான மோகம், நடிகர் அமீர்கானுக்கு அதிகமாகவே இருக்கிறது. மெர்சிடஸ் பென்ஸ் எஸ் 600, டோயாட்டா ஃபார்ச்சுனர், ரோல்ஸ் ராய்ஸ், கோஸ்ட் பாண்டம், பென்ட்லி கான்டினன்டல், BMW 6, ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி மற்றும் BMW 6 சீரிஸ் உள்ளிட்ட பல கார்களை வைத்துள்ளார்.

    1000 பான் மசாலா

    1000 பான் மசாலா

    ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான பிகே படத்தில் ஏலியனாக அமீர்கான் நடித்திருப்பார். இந்தியாவுக்கு வந்து இறங்கும் அவர், பான் மசாலாக்களை வாங்கி திண்ணும் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், தினமும் 100 பான் மசாலா வீதம் ஷூட்டிங் முழுவதும் 10 ஆயிரம் பான் மசாலாக்களை தின்று, தனது பற்களில் ரியல் கறை வேண்டும் என்று இவ்வாறு செய்துள்ளார்.

    மிஸ்டர் பெர்ஃபெக்ட்

    மிஸ்டர் பெர்ஃபெக்ட்

    பாகுபலி படத்தின் வசூல் 1500 கோடியை தொட்ட நிலையில், பாலிவுட் நடிகர்களின் மானத்தைக் காப்பாற்ற தங்கல் படத்தில் கடும் உழைப்பை கொட்டி நடித்திருந்தார் அமீர்கான். 1800 கோடி வசூலை ஈட்டிய தங்கல் படத்தில் 96 கிலோ எடையுடன் தொப்பை போட்டும், அதே படத்தில் ஒரே ஒரு காட்சிக்காக 68 கிலோ எடையுடன் செம ஃபிட்டாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

    அமீர்கான் போன்ற ஒரு கலைஞன் இந்திய சினிமாவுக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான். லால் சிங் சத்தா படத்திலும் பல மேஜிக்குகளை அமீர்கான் செய்வார் என எதிர்பார்க்கலாம்.

    English summary
    Bollywood actor Aamir Khan celebrates his 55th birthday today. Here we collect some interesting facts about the lal singh chaddha actor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X