நெருக்கமான சீன்.. என் முதுகில் சோனியா அகர்வாலின் நகங்கள்.. செம ஜுரம்.. 7ஜி ரெயின்போ காலனி ஹீரோ ஓபன்

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஹீரோ ஹீரோயினாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. அதன் இரண்டாவது பாகத்தை எடுக்கும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார் செல்வா. இந்நிலையில் ஹீரோ ரவிகிருஷ்ணா அந்தப் படம் குறித்து சமீபத்தில் பேசியிருப்பது சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் லெஜெண்ட் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். அவர் இயக்கிய மூன்றாவது படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். காதல் ஜானரில் படம் உருவாகியிருந்தாலும் அதில் செல்வாவின் டச் அதிகம் இருந்தது. போதாக்குறைக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் பற்றிக்கொள்ள; பட்டித்தொட்டியெங்கும் படம் மெகா ஹிட்டடித்தது. அத்தனை காதலர்களும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

7G Rainbow Colony Ravi Krishna Opens Up About Intense Scene with Sonia Agarwal
Photo Credit:

மிடில் கிளாஸ் வாழ்வியல்: அந்தப் படத்தின் மைய சரடு காதலாக இருந்தாலும் மிடில் கிளாஸ் வாழ்வியலை எந்தவிதமான அலட்டலுமின்றி அவ்வளவு நேர்த்தியாகவும், எதார்த்தமாகவும் காண்பித்திருந்தார் இயக்குநர். அதேபோல் தந்தை - மகன் பாசத்தையும் ரொம்பவே எதார்த்தமாக காண்பித்ததில் ரசிகர்கள் அனைவருமே கவரப்பட்டார்கள். இன்றுவரை அந்தப் படம் பலரது ஃபேவரைட்டாகவும் மொபைல் ப்ளே லிஸ்ட்டில் இருக்கிறது. இதன் இரண்டாவது பாகத்தை இப்போது இயக்கும் வேலைகளில் இருக்கிறார் செல்வா.

Also Read
என்னது கமல் மேஜிக் எல்லாம் செய்வாரா?.. நடிகை சொன்ன சூப்பர் சீக்ரெட்.. சகலகலா வல்லவன்னா சும்மாவா?
என்னது கமல் மேஜிக் எல்லாம் செய்வாரா?.. நடிகை சொன்ன சூப்பர் சீக்ரெட்.. சகலகலா வல்லவன்னா சும்மாவா?

சோனியாவுடன் திருமணம்: காதல் கொண்டேன் திரைப்படத்தில்தான் சோனியா அகர்வாலை செல்வா ஹீரோயினாக அறிமுகம் செய்து வைத்தார். அதனையடுத்து 7ஜி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடிக்க வைத்தார். அப்போது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டார்கள். சில வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த அவர்கள்; சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள். இந்தப் பிரிவுக்கு பிறகு செல்வாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. சோனியா இன்னமும் சிங்கிளாகத்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள் கோரிக்கை: இதற்கிடையே செல்வராகவன் இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தபோது எல்லோருமே சொன்னது அவர் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்பதுதான். அதனை ஏற்று அவர் கையில் எடுத்த படங்களில் ஒன்றுதான் 7ஜி ரெயின்போ காலனி 2. இது அந்தப் படத்தின் தொடர்ச்சியாக வருமா அல்லது புது கதையாக வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கின்றன. படத்தின் பணிகள் எல்லாம் தொடங்கி ஜோராக நடக்கவும் தொடங்கிவிட்டன.

ரவி கிருஷ்ணா பேட்டி: இந்நிலையில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணா சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் ஜனவரி மாதம் பாடல் ஷூட்டிங் செய்தார்கள். அப்போது சோனியா அகர்வால் நகங்களை வைத்து என் முதுகை கீற வேண்டும். அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு பார்த்தால் என் முதுகில் நக கீறல்கள் இருந்தன. எனக்கு முதுகு வீங்கி காய்ச்சலே வந்துவிட்டது" என்றிருக்கிறார். அவரது இந்தப் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X