மிஷ்கின்- சேரன் படத்தை வாழ்த்திய ரஜினி!
சமீபத்தில் ரஜினியை விமர்சிப்போர் பட்டியலில் இணைந்த இயக்குநர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தைப் பார்த்துப் பாராட்டினார் ரஜினி.
சமீபத்தில் ஒரு மேடையில், 'ரஜினியின் எந்திரன் படம் தரமற்றது' என்ற ரீதியில் பேசி பரபரப்பேற்படுத்தியவர் இயக்குநர் மிஷ்கின்.
இப்போது சேரன் நடிக்கும் யுத்தம் செய் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
இந்த நிலையில் ரஜினி இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் மிஷ்கினும் சேரனும்.
ரஜினிக்காக சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ரஜினியும் நேற்று மாலை யுத்தம் செய் படம் பார்க்க வந்தார். அவரை சேரனும் மிஷ்கினும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
படம் முடிந்ததும், இருவரையும் பாராட்டிய ரஜினி, யுத்தம் செய் படத்தின் காட்சி அமைப்பு வித்தியாசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தப் படத்தில் சேரன் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். அவரையும் தனியாகப் பாராட்டினார்.
ஜிஎஸ் மூவீஸ் தயாரித்துள்ள இந்த க்ரைம் த்ரில்லர் படம் பிப்ரவரியில் ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











