சித்தார்த்தின் அடுத்த படம்.. அட செம இயக்குநர் இயக்குறாரே.. சீனியர் நடிகரும் இருக்கார்

சென்னை: நடிகர் சித்தார்த் ஹீரோவாக கடைசியாக சித்தா படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவரது நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்ததாக அவர் முக்கியமான ரோல் ஏற்ற இந்தியன் 2 படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்தச் சூழலில் சித்தார்த்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இதுவரை இயக்கவில்லை. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்திருக்கிறார் அவர்.

Siddharth Sri Ganesh Sarathkumar

ஓபன் டாக்: சித்தார்த்தை பொறுத்தவரை தனக்கு மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் ட்வீட்டும் போடுவார்.அப்படி அவர் பதிவு செய்திருந்த பல ட்வீட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்துவருகிறார் சித்தார்த்.

சித்தா: சூழல் இப்படி இருக்க அவர் ஹீரோவாக சித்தா என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். நல்ல எதிர்பார்ப்புக்கிடையே வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை கொடுத்தனர். குறிப்பாக சித்தார்த்தின் கரியரிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட் படமாக அமைந்துவிட்டது எனவும் ரசிகர்கள் கூறினர். இதனால் சித்தார்த் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தார்.

பெரும் ஹிட்: இயக்குநரின் மேக்கிங் ஒருபுறம் சிறப்பாக இருக்க சித்தார்த்தின் நடிப்பு மறுபக்கம் அட்டகாசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் புகழ்ந்தனர். மேலும் சாமானிய ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்களது பாராட்டை தெரிவித்தனர். அதன்படி கமல் ஹாசன், மணிரத்னம், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டினர்.

இந்தியன் 2: சித்தா படத்தின் வெற்றிக்கு பிறகு உற்சாகமாகவே காணப்பட்டார் சித்தார்த். இதனையடுத்து அவரது நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. அந்தப் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் சித்தார்த். மேலும் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்து படம் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்துவருகிறது.

அடுத்த படம்: இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷ் சித்தார்த்தின் அடுத்த படத்தை இயக்குகிறார். இதில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஸ்ரீகணேஷ் கவனம் ஈர்த்த இயக்குநர் என்பதால் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார் சித்தார்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X