90 வயது தர்மேந்திராவை பார்க்க.. 83 வயது அமிதாப் பச்சன் கார் ஓட்டிச் சென்ற காட்சிகள்.. ஷோலே நட்பு!

மும்பை: இந்திய திரையுலகின் ஹீ மேன் என கொண்டாடப்படும் மூத்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உயிரிழந்துவிட்டார் என்றே பொய்யான தகவலை பல முன்னணி பாலிவுட் மீடியாக்கள் வெளியிட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா குணமாகி வீடு திரும்பி தான் ஹீ மேன் மட்டுமில்லை அண்டர்டேக்கர் என்பதையும் நிரூபித்து விட்டார்.

தர்மேந்திராவின் மரணச் செய்திகளை பரப்பிய செய்தி நிறுவனங்களை மன்னிக்கவே மாட்டேன் என ஹேமா மாலினி காட்டமாக பதிவிட்ட நிலையில், சில பாலிவுட் மீடியாக்கள் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுள்ளன.

83 year old Amitabh Bachchan drives himself to meet recently discharged Dharmendra

சன்னி தியோல் டீமில் இருந்து தான் இப்படியொரு தகவல் கசிந்தது என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், இஷா தியோல் உடனடியாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இந்நிலையில், வீட்டுக்கு வந்த தர்மேந்திராவை தானே கார் ஓட்டிச் சென்று அமிதாப் பச்சன் பார்த்த காட்சிகள் பாலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

விரைவில் 90வது பிறந்தநாள்: எமனுக்கே டாட்டா பை பை காட்டிவிட்டு தான் ஹீமேன் என்பதை நிரூபித்த தர்மேந்திராவுக்கு 89 வயதாகிறது. 1935ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிறந்த தர்மேந்திரா வரும் டிசம்பர் 8ம் தேதி தனது 90வது பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கிறார். 2 மனைவிகள் 6 குழந்தைகள் ஏகப்பட்ட பேரக் குழந்தைகள் என பாலிவுட்டின் ராஜாவாகவே வாழ்ந்து வருகிறார். 2வது மனைவி ஹேமா மாலினி, மகன்கள் பாபி தியோல், சன்னி தியோல், மகள் இஷா தியோல் என அனைவருமே சினிமாவில் டாப் நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் ஓட்டிச் சென்ற அமிதாப் பச்சன்: 83 வயதாகும் அமிதாப் பச்சன் இந்த வயதிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். மேலும், ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். தர்மேந்திரா டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிவிட்டார் என்பதை அறிந்த உடனே அவரை நேரடியாக வீட்டிற்கே சென்று பார்க்க தனது டிரைவரை கூட பயன்படுத்தாமல், அமிதாப் பச்சனே 83 வயதில் கார் ஓட்டிக் கொண்டு சென்ற காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஷோலே நட்பு: ஷோலே, சுப்கே சுப்கே, ராம் பல்ராம், தோ அஞ்சானே, தோஸ்த், பஸீரா, ராக் அண்ட் ரோல் என அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அந்த நட்பு இன்று வரையில் இருவர் மத்தியிலும் குறையாமல் உள்ளது என்பதை பார்த்து ரசிகர்கள் பூரித்துப் போயுள்ளனர். கல்கி 2ம் பாகத்தில் அமிதாப் பச்சன் அடுத்ததாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X