twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    9 வருஷம் 40 படங்கள் ஹீரோ, நண்பன், வில்லன், திருநங்கை என அசத்தும் விஜய்சேதுபதி!

    |

    சென்னை: சைடு ரோல்களில் கூட்டத்தில் ஒருத்தனாக நடித்து வந்த நடிகர் விஜய்சேதுபதி பல போராட்டங்களுக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.

    தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய்சேதுபதி 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் 9YrsOfVijaySethupathism என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

    ஹீரோவாக நடித்தாலும், வில்லன், ஹீரோ நண்பன், திருநங்கை என பல பரிமாணங்களில் தொடர்ந்து ஒரு நல்ல நடிகனாகவே தன்னை வெளிக்காட்டி வருகிறார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

    'அந்த படம் ரிலீசான சமயத்தில் என்னை விபச்சாரி என படுக்கைக்கு அழைத்தனர்'.. கர்ப்பிணி நடிகை வேதனை'அந்த படம் ரிலீசான சமயத்தில் என்னை விபச்சாரி என படுக்கைக்கு அழைத்தனர்'.. கர்ப்பிணி நடிகை வேதனை

    1998 முதலே

    1998 முதலே

    தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி சட்டென்று முன்னணி நடிகராக மாறவில்லை. கடந்த 1998ம் ஆண்டு வெளியான கோகுலத்தில் சீதை படத்தில் கூட்டத்தில் ஒருத்தனாக ஆடியன்ஸாக நடித்திருந்தார். அடுத்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி, புதுப்பேட்டை, லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா என பல படங்களில் தொடர்ந்து சைடு ரோலில் நடித்து பின்னர் தான் நாயகன் ஆனார்.

    வெற்றி – தோல்வி

    வெற்றி – தோல்வி

    ஹீரோ ஆன பிறகும் கூட நடிகர் விஜய்சேதுபதிக்கு வெற்றி - தோல்வி என மாறி மாறி தான் வருகிறது. நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தும், நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

    சூப்பர் வில்லன்

    சூப்பர் வில்லன்

    முன்னணி ஹீரோவாக இருக்கும் எந்த ஒரு நடிகரும், மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். சூப்பர் ஸ்டார் வாயால் மகா நடிகன் என்ற பட்டத்தை பெற்ற விஜய்சேதுபதி, மாதவன், ரஜினி, விஜய் என பல முன்னணி ஹீரோக்களுக்கு மாஸ் வில்லனாக நடித்து ஸ்கோர் செய்து வருகிறார்.

    மக்கள் செல்வன்

    ஆரம்பத்தில் காமெடியில் கலக்கி வந்த விஜய்சேதுபதி தனது தனித்துவமான நடிப்பால், தன்னால் எந்த ரோலிலும் நடிக்க முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். 9 ஆண்டுகள் ஹீரோவாக நடித்து வரும் விஜய்சேதுபதிக்கு 9YrsOfVijaySethupathism என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

    சீனு ராமசாமிக்கு நன்றி

    விஜய்சேதுபதி எனும் மகா நடிகனை கண்டுபிடித்து தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குநர் சீனு ராமசாமிக்கு ரசிகர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

    பவர்ஹவுஸ் பெர்ஃபார்மர்

    நடிகர் விஜய்சேதுபதி தான் நடிக்கும் படங்களில் பவர்ஹவுஸ் பெர்ஃபார்மன்ஸை தொடர்ந்து கொடுத்து வருகிறார். அவருக்கான ஒரு மாஷ்-அப் வீடியோவை ஷேர் செய்து இந்த ரசிகர் டிரெண்ட் செய்து வருகிறார்.

    குருநாதா

    குருநாதா

    இயக்குநர் சீனுராமசாமியை நடிகர் விஜய்சேதுபதி குருநாதா என்றே தான் அழைப்பார். அவரிடம் கற்றுக் கொண்ட சினிமாவைத் தான் செய்து வருவதாக நடிகர் விஜய்சேதுபதி பல மேடைகளில் கூறியுள்ளார். இந்நிலையில், விஜய்சேதுபதியின் இந்த வளர்ச்சிக்கு குருநாதா தான் காரணம் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

    விஜய்சேதுபதிஸம்

    இந்த வார்த்தைக்கு மிகப் பொருத்தமாக விஜய்சேதுபதிக்கு அமைந்த படம் தான் விக்ரம் வேதா. திங்க் மியூசிக் அந்த படத்தின் காட்சிகளை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளது.

    சிறந்த நடிகர்

    2010ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமாகி இந்த 9 ஆண்டுகளில் பல ஹிட் படங்களையும், பல சிறந்த நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்திய விஜய்சேதுபதி இந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக சிறந்த நடிகர் என்று இந்த நெட்டிசன் ட்வீட் போட்டுள்ளார்.

    English summary
    VijaySethupathi’s first debut hero movie Thenmerku Paruvakatru released on this day 9 years before. VijaySethupathi fans created 9years of VijaySethupathism hashtag and pouring their wishes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X