சாய் பாபா படத்தில் நடிக்க 60 நாட்கள் விரதமிருந்த பிரபல நடிகர்.. யாருன்னு பாருங்க!
சென்னை: சாய் பாபாவின் படத்தில் நடிக்க பிரபல நடிகர் 60 நாட்கள் விரதமிருந்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பக்தி படங்கள் தயாரிக்கப்படுவது காலம் காலமாக இருந்து வரும் ஒன்று. சமீப காலமாக பேய் படங்கள் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் இயக்குநர்கள்.
பேய்களில் நியாயமான நல்ல பேய்களும் உள்ளது என்று கூறும் படங்களும் கடைசியில் சாமிதான் ஜெய்க்கும் என கூறும் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சாய் பாபாவின் அற்புதங்கள்
சில இயக்குநர்கள் தங்களுக்கு பிடித்த கடவுளை தங்களின் படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் மிங்கிள் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் பிடித்த கடவுள்களை மையப்படுத்தியே படங்களை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஷீரடி சாய் பாபாவின் அற்புதங்களை கூறும் படம் ஒன்று தயாராகி வருகிறது.

சாய் பாபா மகிமை
ஷீரடி சாய் பாபா மகிமை என்ற டைட்டிலுடன் உருவாகும் இப்படத்தை பிரியா பாலு இயக்குகிறார். பிரியா பாலு ஏற்கனவே ஏராளமான குறும்படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரவிக்குமார் சாய் பாபாவாக நடிக்கிறார். இவர் 'என் நெஞ்சை தொட்டாயே, ' 'திகிலோடு விளையாடு' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

60 நாட்கள் விரதம்
மேலும் பல ஷார்ட் பிலிம்ஸ் மற்றும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார் ரவிக்குமார். இந்நிலையில் சாய் பாபாவாக நடிக்கும் ரவிக்குமார் இதற்காக 60 நாட்கள் விரதம் இருந்துள்ளார். விரதமிருந்து சாய் பாபா படத்தில் நடிக்கிறார் ரவிக்குமார். மேலும் பல படங்களில் நடித்துள்ள வினாயகராஜ், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விரைவில் அறிவிப்பு வெளியாகும்
சாய் பாபாவை நேசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாய் பாபாவின் அற்புதங்களையும் மகிமையையும் கூறும் வகையில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











