கொண்டாட்டமான படம்... பைக் காட்சிகள் வேற லெவல்... யாரு பாராட்டியிருக்காங்க பாருங்க!
சென்னை : நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் வெளியாகியுள்ளது வலிமை.
படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் படம் குறித்து என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அருண் விஜய் செய்துள்ள ட்வீட் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

வலிமை படம்
நடிகர் அஜித் இயக்குநர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் இணைந்து இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் வலிமை. முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தில் சமூக விழிப்புணர்வு மற்றும் பெண் உரிமையை மையமாக கொண்டு படத்தை எடுத்திருந்தார் வினோத். இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்தாலும் அஜித்தை ஆக்ஷன் அவதாரத்தில் பார்க்க அவர்கள் காத்திருந்தார்.

உலகளவில் வெளியான வலிமை
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது கனவு தற்போது நனவாகியுள்ளது. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான வலிமை படம் இன்றைய தினம் உலகளவில் வெளியாகியுள்ளது. படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டியுள்ளது. பொங்கலன்றே ரிலீசாக வேண்டிய இந்தப் படம் தற்போது ஒரு மாதம் கடந்து வெளியான நிலையிலும், வலிமை திருவிழாவாக இன்றைய தினம் படத்தை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் சென்று பார்த்து வருகின்றனர்.
Recommended Video

திரையுலக பிரபலங்கள் ஆர்வம்
தமிழகத்தில் மட்டும் 607 திரையரங்குகளில் படம் ரிலீசாகியுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் திரையரங்குகளில் சென்று ரசிகர்களுடன் ஒன்றாக இணைந்து படத்தை பார்த்து வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு, அருண் விஜய் உள்ளிட்டவர்கள் படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அருண் விஜய் பாராட்டு
அந்த வகையில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்த நடிகர் அருண் விஜய், முதல் நாள் முதல் ஷோவாக வலிமை படத்தை பார்த்துள்ளார். மேலும் படம் ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான ட்ரீட்டாக அமைந்துள்ளதாகவும் குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகள் வேற லெவல் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











