அமிதாப் பச்சனுக்கு ஒரு சபாஷ் போடு
மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சுமார் 200 விவசாயிகளின் வங்கிக் கடனான ரூபாய் ரூ.1 கோடியே 25 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
வடநாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதும், போராட்டங்கள் செய்வதும் வழக்கமான ஒன்றாக மாறிவருகின்றது.

இந்நிலையில் நமக்கெல்லாம் உணவு அளிக்கும் விவசாயிகளின் இந்த வேதனைகளைப் பார்த்துவிட்டு தன்னால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று எல்லா மனிதர்களுக்கும் ஆதங்கம் வருவதுண்டு.
அதேபோலத்தான் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை பார்த்து மிகவும் துயரத்திற்கு ஆளாகி தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமென்று, சுமார் 200 விவசாயிகளின் கடனான ரூபாய் 1 கோடியே 25 லட்சத்துக்கான வங்கிக்கடனை தன் சொந்த செலவில் அடைத்துள்ளார்.
மேலும் இந்திய ராணுவத்தில் நம் நாட்டிற்காக உயிர் இழந்த பல ராணுவத்தினர் குடும்பத்திற்கும் அரசு உதவியுடன் தனது சொந்த செலவில் ரூ.1 கோடியைப் பகிர்ந்து அளித்து உதவி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











