100 சதவீதம் விஜய் தான்.. கடைசியா கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன விஜய் பாடிகார்ட்.. செம போஸ்ட்!

சென்னை: தவெக தலைவராக மாறியுள்ள நடிகர் விஜய்க்கு பவுன்சராக செயல்பட்ட நயீம் மூசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை கட்டிப்பிடித்து எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு பதிவிட்டு இருப்பது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் எல்லாம் கட்சி தொடங்கவே மாட்டார் என்று கிண்டலடிக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து 233 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி பல்வேறு மாவட்டங்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.

A leader who connects beyond words beyond barriers Vijay s bodyguard emotional post
Photo Credit:

ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்கிறார் என்றும் வீட்டை விட்டு வெளியே வா என்றும் விஜய்யை கிண்டல் செய்தனர். ஆனால், விஜய் வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில், கூடிய பெருங்கூட்டத்துக்கு பாதுகாப்பு போட முடியாமல் காவல்துறை திணறியது. விஜய்க்கு பக்க பலமாக சில பாடிகார்ட்கள் இருந்தனர். அதில் ரொம்பவே குறிப்பிடத்தக்கவர் தான் நயீம் மூசா.

ஷாருக்கான் முதல் பிருத்விராஜ் வரை: இந்தியாவின் காஸ்ட்லியான பாடிகார்டாகவே வலம் வருகிறார் நயீம் மூசா. விராட் கோலி, கரீனா கபூர், ஷாருக்கான், மோகன்லால், பிருத்விராஜ் என ஏகப்பட்ட பிரபலங்களுக்கு பாடிகார்ட்டாக செயல்பட்டு வந்த இவரைத்தான் விஜய் தனக்கான பர்சனல் பாடிகார்ட் டீமில் ஹயர் செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் விஜய் பிரச்சாரத்துக்கு கிளம்பும் போது வேனில் மேலே உட்கார்ந்துக் கொண்டு பக்க பாதுகாப்பை வழங்கி உள்ளார் நயீம் மூசா.

A leader who connects beyond words beyond barriers Vijay s bodyguard emotional post
Photo Credit:

ஒவ்வொரு தெருவிலும் மக்கள் நேசிக்கிறாங்க: தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விஜய்யை சந்தித்து கட்டிப் பிடித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் நயீம் மூசா. ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு உயிரிலும் கலந்திருக்கிறார் விஜய். அவருக்கான கூடிய கூட்டத்தை பார்க்கும் போது அதில் போலித்தன்மையே தெரியவில்லை. 100 சதவீதம் விஜய் மீதான அன்பு தான். இன்று அவரை கட்டிப் பிடிப்பதில் பெருமைக் கொள்கிறேன். நாளை தமிழ்நாட்டு மக்களின் இதயமாகவே அவர் மாறப் போகிறார் என நயீம் மூசா விஜய் இந்த தேர்தலில் மெகா வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.

குவியுது லைக்ஸ்: விஜய்யின் பாடிகார்ட் டீமில் இருந்தவர்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்த வலியும் வேதனையும், அவர்கள் விஜய்யை பாதுகாக்க பொதுமக்களை எதிர்கொண்ட விதமும், நேற்று டிரோன் ஆப்பரேட்டர் விஜய்க்கு அருகே ட்ரோன் விட்ட போதும் கூட அதை தடுத்ததும் பாடிகார்ட்கள் தான். நயீம் மூசா பதிவிட்டுள்ள இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Read more about: vijay tvk vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X