ஜெயில் படத்துக்காக நிறைய ஹார்ட் வொர்க் பண்ணோம்... ஜிவி பிரகாஷ் வெளிப்படை!

சென்னை : நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில்.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக அதிகமான கடின உழைப் கொடுத்ததாக படத்தின் நாயகன் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார்

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில். இந்தப் படத்தை இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக இந்தப் படம் ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தற்போது இதன் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஜெயில் படம்

ஜெயில் படம்

முன்னதாக ஜிவி பிரகாஷின் முதல் படமான டார்லிங் மற்றும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களை வெளியிட்டுள்ள ஸ்டூடியோ க்ரீன் மூன்றாவது முறையாக ஜிவி பிரகாஷுடன் இணைந்துள்ளது. படத்தில் அபர்ணிதி நாயகியாக நடித்துள்ளார். இயல்பான நடிப்பை ஜிவி பிரகாஷுடன் இணைந்து இவர் அளித்துள்ளார்.

வெளியான டீசர்

வெளியான டீசர்

விரைவில் ரிலீசுக்கு தயாராகிவரும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் நடிகர் தனுஷால் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வசந்தபாலன் -ஜிவி பிரகாஷ் கூட்டணி படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை

ஜிவி பிரகாஷ் இசை

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் காற்றோடு காற்றானேன் பாடல் சிறப்பான மெலடியாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இணைந்து பாடியுள்ளனர். இளசுகளின் நம்பர் ஒன் விருப்பப் பாடலாக இந்தப் பாடலை அமைத்துள்ளார் ஜிவி.

Recommended Video

Annaatthe படத்தில் நடித்த அனுபவம் | Actor Vishwanth Exclusive | Filmibeat Tamil
கடின உழைப்பை அளித்தேன்

கடின உழைப்பை அளித்தேன்

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ்குமார், இந்தப் படத்திற்காக அதிகமான அளவில் கடின உழைப்பை அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய விருப்பத்திற்குரிய இயக்குநர் வசந்தபாலனிடம் இருந்து வெளிவந்துள்ள டீசர் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான காற்றோடு பாடல்

சிறப்பான காற்றோடு பாடல்

படத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணிதியுடன் ராதிகா சரத்குமார், பசங்க பாண்டி, நாதன் ராம், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வித்தியாசமான கெட்டப்பில் இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷை பார்க்க முடிகிறது. மேலும் படத்தில் அவருக்கும் நாயகிக்குமான கெமிஸ்ட்ரியும் காற்றோடு காற்றானேன் பாடல் மூலம் வெளிப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் பேச்சிலர் படமும் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த இரு படங்களில் எந்தப் படம் முதலில் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. இரண்டு படமும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய லிஸ்ட்டில் உள்ள நிலையில் எந்தப் படம் வெளிவந்தாலும் அதை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X