விஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்
சென்னை:விஜய்யின் பிறந்தநாள் அன்று ஆர்யாவின் வீட்டில் காதல் திருமணம் நடைபெற உள்ளது.
நடிகர் ஆர்யாவுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவருக்கு பெண் தேட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுடன் நன்றாக கடலை போட்ட ஆர்யா இறுதியில் யாரையும் தேர்வு செய்யவில்லை.

ப்ரொபோஸ்
ட்விட்டரில் த்ரிஷா, அமலா பால் ஆகியோரிடம் ப்ரொபோஸ் செய்தார் ஆர்யா. அமலா பால் நைசாக நழுவிவிட்டார். த்ரிஷா ஓகே சொல்லியும் இன்னும் திருமண பேச்சு கிளம்பவில்லை.

திருமணம்
ஆர்யாவுக்கு பிக்கப் டிராப் ஆகும் அளவிற்கு காதல் கைகூடவில்லை. அவருக்கு பெண் தேடி அவரது பெற்றோர்கள் ஓய்ந்துவிட்டார்களாம். இந்நிலையில் தான் ஆர்யாவின் வீட்டில் திருமணம் நடைபெறுகிறது.

சத்யா
ஆர்யாவின் தம்பி சத்யா தனது காதலி பாவனாவை வரும் 22ம் தேதி அதாவது விஜய் பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

காதல்
சத்யா கல்லூரியில் படித்தபோது பாவனாவை சந்தித்து காதலில் விழுந்தாராம். அண்ணன் வழியில் நடிக்க வந்த சத்யா புத்தகம், அமரகாவியம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சத்யாவின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கிறார்களாம்.

தம்பி
ஆர்யாவுக்கு தான் எதுவும் செட்டாகவில்லை. அதனால் தம்பிக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆர்யாவின் ரசிகர்களோ அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











