அமரன் அப்டேட்.. The Final Frame.. வெளியான அட்டகாச வீடியோ.. சிவகார்த்திகேயன் வேற லெவல்

சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர். அவருக்கு போட்டியாக கருதப்பட்ட விஜய் சேதுபதியும் தற்போது ஹிந்திவரை சென்றுவிட்டதாலும்; விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதாலும் அடுத்த மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயனே என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறிவருகிறார்கள். அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில்அமரன் படம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

சின்னத்திரையில் போட்டியாளராக கலந்துகொண்டு பிறகு தொகுப்பாளராக வளர்ந்து அதன் பின்னர் ஹீரோவானவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அவர் அடித்த லூட்டிகளும், டைமிங் காமெடிகளும் மக்கள் மத்தியில் அப்போதே சென்று சேர்ந்துவிட்டன. இதன் காரணமாக சினிமாவில் அறிமுகமாகும்போது ரசிகர்களிடம் எளிதாகவே கனெக்ட் ஆகிவிட்டார் சிவா. இருந்தாலும் பத்து படங்களுக்குள்ளாகவே அவரது திரை பயணம் முடிந்துவிடும் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

A new video from Sivakarthikeyan starrer Amaran is out

வளர்ந்த சிவகார்த்திகேயன்: ஆனால் அந்த ஆரூடத்தை எல்லாம் அடித்து நொறுக்கும் விதமாக இருந்தது சிவகார்த்திகேயனின் வளர்ச்சி. நடனம், நடிப்பு என அத்தனையையும் முறையாக கற்றுக்கொண்டு படத்துக்கு படம் உயர்ந்த இடத்துக்கு சென்றார். அதன் காரணமாக விரைவாகவே டாப் 10 நடிகர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். குறிப்பாக டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. அதனை பார்த்த பலரும் பலமாகவே ஆச்சரியப்பட்டார்கள்.

அமரன்: வரிசையாக இரண்டு நூறு கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்த சிவாவுக்கு பிரின்ஸ் இடியாக விழுந்தது. அதில் விட்டதை மாவீரன் படத்தில் பிடித்தார். முக்கியமாக மாவீரன் ஆடியோ லான்ச்சில் பேசியிருந்த அவர், பிரின்ஸில் விட்டதை மாவீரனில் பிடித்துவிடுவேன் என்று சூளுரைத்தார். சொன்னபடியே ஹிட்டடித்துவிட்டதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

The Final Frame: இந்நிலையில் அமரன் படத்திலிருந்து புதிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. The Final Frame என்ற பெயரில் வெளியாகியிருக்கும் 22 நொடி வீடியோ சிவகார்த்திகேயன் ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கிறார். அவருடன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் வேற லெவலில் இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்து அதனை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

A new video from Sivakarthikeyan starrer Amaran is out

அடுத்த படங்கள்: இதற்கிடையே சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடியும் தருவாயில் இருக்கிறது. இதனை முடித்துவிட்டு அவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X