விஜய் கையில் இவ்வளவு பெரிய காயமா?.. வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் சோகம்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்றும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் விஜய்யின் கையில் ஏற்பட்ட காயம் குறித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவராகவும் இருக்கிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம்கூட 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். பவதாரிணி உயிரிழப்பால் படத்தின் ஷூட்டிங் இடையில் சில நாட்கள் தடைபட்டது. அதனையடுத்து மீண்டும் இப்போது ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்துவருகிறது. படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகிறது.

A photo of Vijay s hand injury has been out now Here are the details

அரசியல் என்ட்ரி: விஜய் GOAT படத்தில் கமிட்டானபோதே அதுதான் அவருடைய கடைசி படம். விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பலரால் கூறப்பட்டது. அதற்கெல்லாம் விஜய் அமைதியாக இருந்தார். திடீரென சில நாட்களுக்கு முன்பு, 'தமிழக வெற்றி கழகம்'என்ற கட்சியை தொடங்குவதாக எந்தவித அலட்டலும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துவிட்டார். மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் வேலைகளும் ஆரம்பித்திருக்கின்றன.

படத்துக்கு நோ: தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்த கையோடு சினிமாவுக்கும் முழுக்கு போடும் திட்டத்தையும் அவர் கையில் எடுத்திருக்கிறார். இன்னும் ஒரு படத்தில் மட்டும் பணியாற்றிவிட்டு முழுக்க முழுக்க மக்கள் பணியில் ஈடுபடுவேன் என்று அவர் அறிவித்ததால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கின்றனர். அதேசமயம் விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிப்பார் என்று இன்னொரு தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில்: விஜய் இப்போது அரசியல் கட்சி தொடங்கிவிட்டாலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் கட்சி போட்டியிடவும் இல்லை; வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. ஆனால் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு எடுத்திருக்கிறார். அநேகமாக அந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்றும்; அதில் மக்களின் பல்ஸை பார்த்துவிட்டு அடுத்தடுத்த தேர்தல்களில் விஜய் கூட்டணியை நோக்கி நகரலாம் என்றும் கருத்துக்கள் எழுந்திருக்கின்றன.

கையில் காயம்: சூழல் இப்படி இருக்க நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விஜய் வாக்களிக்க வந்தபோது கையில் சிறிய அளவிலான Bandage ஒட்டியிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு என்ன ஆச்சு என்று சோகத்துடனும், அதிர்ச்சியுடனும் கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில் கில்லி படத்தின் ரீ ரிலீஸ் சக்சஸை முன்னிட்டு அந்தப் பட குழுவினர் விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்தனர்.

அப்போது விஜய்யின் கையில் இருந்த காயத்தின் புகைப்படத்தையும் ரசிகர்கள் நோட் செய்துவிட்டனர். குறிப்பாக அந்தக் காயம் சிறிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் கொஞ்சம் பெரிய அளவிலேயே இருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், இந்தக் காயம் GOAT படத்தில் நடிக்கும்போது வந்துவிட்டதா?.. தளபதியை பத்திரமாக பார்த்துக்கோங்க வெங்கட் பிரபு என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X