twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர்களின் வாரிசுகள் கஷ்டப்படறாங்க!- பி வாசு மகன் பேச்சு

    By Shankar
    |

    பொதுவாக இன்றைய கால கட்டத்தில் சினிமாவில் சுலபமாக ஜெயிப்பது, சினிமாக்காரர்களின் வாரிசுகள்தான். ஒன்றிரண்டு சொதப்பினாலும் பணபலம் இருப்பதால் தாக்குப் பிடித்து அடுத்த படத்தில் வெற்றியைப் பிடித்துவிடுகிறார்கள்.

    ஆனால் இதில் ஒரு வித்தியாசத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் இயக்குநர் பி வாசுவின் மகனும் நடிகருமான சக்தி.

    அது என்ன வித்தியாசம்? அதைப் பார்க்கும் முன், இப்போது அவர் நடித்து வரும் படம் குறித்து....

    படம் பேசும்...

    படம் பேசும்...

    தொட்டால் பூ மலரும் படத்தில் அறிமுகமாகி, நினைத்தாலே இனிக்கும் போன்ற சில படங்களில் நடித்துள்ள சக்திக்கு, பெரிய வெற்றிப் படம் என எதுவும் அமையவில்லை. நினைத்தாலே இனிக்கும் சுமாராகப் போனது. இப்போது அவர் பெரிதும் நம்பிக் கொண்டிருப்பது படம் பேசும் என்ற படத்தைத்தான்.

    தண்டுபால்யா தயாரிப்பாளர்

    தண்டுபால்யா தயாரிப்பாளர்

    இந்தப் படத்தை ராகவ் என்பவர் இயக்குகிறார். பூர்ணா ஜோடியாக நடித்துள்ளார். காமெடிக்கு விவேக், கேரக்டருக்கு ஷாயாஜி ஷிண்டே, சீதா போன்றவர்கள் உள்ளனர்.

    தண்டுபால்யா படத்தைத் தயாரித்த ஆப்பிள் ப்ளாஸம் கிரியேஷன்ஸ் எச்டி நாராயணபாபு இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

    நிஷா கோத்தாரி

    நிஷா கோத்தாரி

    கவர்ச்சிக்கு நிஷா கோத்தாரியைப் பிடித்துப் போட்டுள்ளனர். ஜேஜேயில் அமோகா என அறிமுகமாகி, பின்னர் ராம் கோபால் வர்மாவின் ஆஸ்தான கதாநாயகி நிஷா கோத்தாரியாக கலக்கியவர், இப்போது ப்ரியங்கா கோத்தாரி என பெயர் மாறி இந்தப் படத்தில் நடிக்கிறார். ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

    படம் பற்றி இயக்குனர் ராகவா

    படம் பற்றி இயக்குனர் ராகவா

    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. இதில் பங்கேற்ற இயக்குநர் ராகவ் படம் குறித்து கூறுகையில், "இது பக்கா கமர்சியல் படம். சக்தியின் சினிமா கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும் பத்து கோடி செலவில் இந்த படம் தயாராகிக்கொண்டிருகிறது.

    இது மாதிரி ஒரு படம் ஏற்கெனவே நாம் பார்த்தோமோ என்கிற எண்ணம் யாருக்குமே ஏற்படாது. அந்த அளவுக்கு புது மாதிரியாக இருக்கும் பக்கா ஆக்க்ஷன் கமர்ஷியல் படம்," என்றார்.

    இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கஷ்டம்...

    இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கஷ்டம்...

    படத்தின் ஹீரோ சக்தி கூறுகையில், "சினிமாவில் நான் இதுவரை எதுவுமே சாதிக்கவில்லை. இந்தப் படம்தான் எனக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. பொதுவாக நடிகர்களின் வாரிசுகள் ஈஸியா ஜெயிச்சிடறாங்க. ஆனா என்னை மாதிரி டெக்னீஷியன்களின் வாரிசுகளால்தான் அவ்வளவு சீக்கிரம் ஜெயிக்க முடிவதில்லை," என்றார்.

    English summary
    Director P Vasu son actor Shakthi says that actors heirs always in to position in Kollywood but a technician's son like him is struggling struggling to get a place.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X