விஜய் கட்சி பேரு சூப்பர்.. ஒரு வாரத்துல 1000 பேரை கட்சியில் சேர்ப்பேன்.. அலறவிட்ட பாட்டி!

சென்னை: விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வந்த நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு 'க்' வருமா வராதா என்கிற பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கும் நிலையில், விஜய்யின் கட்சிப் பெயர் சூப்பர் என்று ஒரு மூதாட்டி இணையத்தில் அலப்பறையாக பேசி உள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பத்து வருடங்களாக அரசியலுக்கு வருவார் என சொல்லப்பட்டு வந்தது. அவரின் ஒவ்வொரு படத்திற்கும் எழுந்த பிரச்சனைகள், அவர் இசை வெளியீட்டு விழாவில் பேசும் பேச்சுக்கள் அவரை கண்டிப்பாக அரசியலுக்கு கொண்டு வரும் என பலராலும் நம்பப்பட்டது. ஆனால் விஜய் அரசியலில் கண்டிப்பாக களமிறங்குவேன் என கூறியதில்லை. அரசியலுக்கு வரமாட்டேன் எனவும் சொல்லவில்லை.

A video of an old lady praising Vijay is trending on the internet

எனவே விஜய், எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜய் சில நாட்களுக்கு முன்பு தன் அரசியல் பயணத்தை உறுதி செய்தார். தமிழக வெற்றி கழகம் என்ற தன் கட்சியை பதிவு செய்து அரசியலில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளார் விஜய்.

ரசிகர்கள் கவலை: அரசியலில் களமிறங்குவதால் கையில் இருக்கும் படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாகவும், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் தங்களின் இலக்கு என்றும் விஜய் அறிவித்து இருந்தார். விஜய்யின் அரசியல் வருகையால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள், நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்கவேண்டும் என தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அலறவிட்ட பாட்டி: இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகையில் மகிழ்ச்சி அடைந்துள்ள மூதாட்டி ஒருவரின் பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தமிழக வெற்றி கழகம் விஜய்யின் கட்சி பெயர் நல்லா இருக்கு, தமிழகமும் நல்லா இருக்கு, வெற்றியும் நல்லா இருக்கு, கழகமும் நல்லா இருக்கு. முத்தமிழ், ஏக் த்தோ தீன் சூப்பரோ சூப்பர். நடிகர் விஜய்யின் கட்சி அலுவலகம் எங்கே இருக்குனு சொல்லுங்க நான், முதல் உறுப்பினராக மாறி, அவருக்கு ஆயிரம் உறுப்பினர்களை ஒரே வாரத்தில் சேர்க்க தயாராக இருக்கிறேன். விஜய் தேர்தலில் நின்றால், நிச்சயம் வெற்றி வாகை சூடுவார் என்று மூதாட்டி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல்,பொதுமக்கள் பலர் லைக்குகளை கொடுத்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X