லோக்கல் தியேட்டருக்கு சென்ற GOAT விஜய்.. என்ன படம் பார்த்தார் தெரியுமா?.. வீடியோ செம ட்ரெண்டிங்

சென்னை: நடிகர் விஜய் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவர் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர் அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியல் களத்தில் குதிக்கவிருக்கிறார். சமீபத்தில்தான் அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியும், பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தச் சூழலில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார் அவர். யாரும் எதிர்பார்க்காத வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் இப்போது நடித்து முடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று ட்ரெய்லரை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் இப்போது உறுதியாக கூறிவருகின்றனர். செப்டம்பர் ஐந்தாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. அஜித்துக்கு எப்படி வெங்கட் பிரபு மங்காத்தா படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தாரோ அதேபோல் இந்தப் படத்தையும் கொடுப்பார் என்பதுதான் தளபதி ரசிகர்களின் நம்பிக்கை.

vijay goat

டிக்கெட் புக்கிங்: படத்தின் ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்கள்தான் இருக்கின்றன. டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.முதன்முறையாக வெங்கட் பிரபுவுடன் விஜய் கூட்டணி அமைத்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஆவலை அவரது ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.

சிம்பிள் விஜய்: விஜய் இப்போது பெரிய ஸ்டாராக இருந்தாலும் அவர் எப்போதும் சிம்பிளாகத்தான் பழகுவார், இருப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் கூறியிருக்கிறார்கள். அதன் காரணமாகவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வயது ஆனாலும் ஸ்டைலும், அழகும் இன்னும் போகாமல் இருப்பதை பார்த்தும் ஒட்டுமொத்த திரைத்துறையினரும் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அரசியல் கட்சி: விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஹெச்.வினோத் இயக்குகிறார். கண்டிப்பாக விஜய்யின் கடைசி படத்தை தரமான படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் உழைக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தப் படம் அரசியல் படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியான சூழலில் அதனை மறுத்திருக்கும் வினோத்; இது அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக இருக்கும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

வைபவ் பேட்டி: இந்நிலையில் GOAT படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அதனையொட்டி படத்தில் நடித்திருக்கும் வைபவ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒருமுறை விஜய்யுடன் படம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். சலார் படத்துக்கு டிக்கெட் புக் செய்திருந்தார்கள். எனக்கு அந்த டிக்கெட்டை அனுப்பினார்கள். அதில் பால்கனி இல்லாமல் கீழே டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த நான் டிக்கெட்டை தப்பா புக் செஞ்சிருக்கீங்களா; கீழே இருக்கு என்று கேட்டேன். அதற்கு அவர்களோ விஜய் சார் இப்படித்தான் படம் பார்ப்பார். ரசிகர்களோடு ரசிகராக இருந்து படம் பார்க்கத்தான் அவருக்கு பிடிக்கும். அதற்கு பிறகு ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு லோக்கல் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தோம்" என்றார்.

அந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் அட விஜய் இப்படியெல்லாம் செய்வாரா என்று ஆச்சரியப்பட்டனர். சூழல் இப்படி இருக்க சலார் படத்தை ஹைதராபாத்தில் இருக்கும் லோக்கல் தியேட்டர் ஒன்றில் முகத்தில் மாஸ்க் போட்டபடி அமர்ந்து விஜய் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி செம ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X