Vijay - அவ எல்லாத்துக்கும் திட்டுவா.. திரிஷாவை வைத்துக்கொண்டு மனைவி பற்றி ஓபனாக பேசிய விஜய்

சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பவதாரிணியின் உயிரிழப்பால் தடைப்பட்ட ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் கடைசியாக நடித்த லியோ விமர்சன ரீதியாக அடி வாங்கியது. எனவே அதனை இதில் சரிக்கட்டுவதற்கு விஜய் கடுமையாக உழைத்துவருகிறார். இந்தச் சூழலில் விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த அவர் இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக மாறி நிற்கிறார். அதற்கு ஒரே காரணம் அவரது உழைப்புதான். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை விமர்சன அம்புகளையும் எதிர்கொண்டு திறமையை வளர்த்து தற்போது தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

A video of Vijay talking about his wife Sangeetha is trending on the internet

லியோ வசூல்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக அந்தந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கின்றன. அதன்படி அந்த மூன்று படங்களுமே வரிசையாக 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

முற்றுப்புள்ளி: இதன் காரணமாக அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் தளபதிதான் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறினர். இதனையொட்டி ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பஞ்சாயத்தும் ஆரம்பித்தது. ஆனால் லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய்யின் பேச்சு அந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும். அதேபோல் ரஜினிகாந்த்தும் அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

GOAT: விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். அவருடன் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். மும்முரமாக தொடங்கிய ஷூட்டிங் பவதாரிணியின் உயிரிழப்பால் தடைப்பட்டது. தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அஜித்துக்கு எப்படி மங்காத்தா என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தாரோ அதேபோல் வெங்கட் பிரபு விஜய்க்கும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சை: இதற்கிடையே விஜய்யை சுற்றி இன்னொரு சர்ச்சையும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது அவரும் மனைவி சங்கீதாவும் பேசிக்கொள்வதில்லை. இரண்டு பேருக்கும் இடையே மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் சங்கீதா தனது மகளுடன் லண்டனில் வசித்துவருகிறார். விஜய் இங்கு தனியாகத்தான் இருக்கிறார். அதற்கு காரணம் திரிஷாவுடன் விஜய்க்கு மீண்டும் ஏற்பட்ட பழக்கம்தான் போன்ற பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் அதில் துளிக்கூட உண்மையில்லை என்று விஜய் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் தனது மனைவி குறித்து விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. காஃபி வித் அனுவில் அவரும் திரிஷாவும் கலந்துகொண்டனர். அப்போது அனுஹாசன் விஜய்யிடம், 'உங்கள் மனைவி உங்களை என்ன சொல்லி திட்டுவார்''என்று கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், அவ எல்லாத்துக்கும் திட்டிக்கிட்டேதான் இருப்பா என ஜாலியாக பதில் சொல்லியிருக்கிறார். அந்த வீடியோதான் இப்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X