Shanthanu - என் மனைவிக்கு அந்த நோய் எல்லாம் இல்லைங்க.. இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட சாந்தனு

சென்னை: Shanthanu (சாந்தனு) சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ். அவரது மகன் சாந்தனுவும் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தாணு தயாரிப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானது.

A video posted by Shanthanu on his Instagram page has become a trend

படம் படுதோல்வி: பாக்யராஜின் மகன், கலைப்புலி தாணுவின் மகன் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை எனவே படம் தரமாக இருக்கும் என்ற நினைப்போடு படம் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் தேறியது என்றால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள்தான். அதேசமயம் டாக்ஸி டாக்ஸி பாடலில் சாந்தனுவின் நடனமும் பலரையும் கவர்ந்தது.

சுப்ரமணியபுரம் மிஸ்: இதற்கிடையே சாந்தனு முதலில் அறிமுகமாகவிருந்தது சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆன சுப்ரமணியபுரம் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய் நடித்த அழகர் கேரக்டரில்தான் சாந்தனு நடிக்க வேண்டியது. ஆனால் தாணு தயாரிப்பு என்பது பெரிய பேனர் என்பதால் சக்கரக்கட்டிக்காக சுப்ரமணியபுரத்தை மறுத்தார் பாக்யராஜ்.

தடுமாறும் சாந்தனு: ஒருவேளை சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமாகியிருந்தால் சாந்தனுவின் சினிமா பாதை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பதுதான் உண்மை. சக்கரக்கட்டி படத்துக்கு பிறகு அவர் நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. அவரது நடிப்பில் கடைசியாக இராவண கோட்டம் வெளியானது. விக்ரம் சுகுமாறன் இயக்கம் என்பதால் கண்டிப்பாக அந்தப் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று சாந்தனு நம்பினார். ஆனால் அந்தப் படமும் தோல்வியையே சந்தித்தது.

திருமணம்: சாந்தனு பிரபல தொகுப்பாளினி கிக்கி விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்துக்கு நடிகர் விஜய்தான் தாலி எடுத்து கொடுத்தார். இருவரது திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சாந்தனு வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

அதாவது அந்த வீடியோவில் வீட்டுக்குள் நுழையும் சாந்தனு எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே போட்டுவிடுகிறார். எதையும் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் கிக்கியோ சாந்தனு கண்டபடி போடும் பொருட்களை; குப்பை போடும் இடங்களை சுத்தம் செய்து சரி செய்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்த சாந்தனு, 'என் மனைவிக்கு OCD (அதீத சுத்தத்தை எதிர்பார்ப்பவர்கள்) நோய் எல்லாம் இல்லை. நாங்கள் ஒரு முரண்பாடான ஜோடி அவ்வளவுதான்' என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X