சூர்யா பிறந்தநாள்.. கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்.. அவர்களுக்கும் ட்ரீட் காத்திருக்கு!

சென்னை : நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.

அவரது பிறந்தநாளில் அவர் தற்போது கமிட்டாகியுள்ள படங்களின் அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா கோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து அனைவரையும் மிரட்டி வருகிறார். ரசிகர்களை தொடர் கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கி வருகிறார். இவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

கேமியோ ரோல்

கேமியோ ரோல்

இதையடுத்து கடந்த மாதத்தில் வெளியான விக்ரம் படத்தில் சூப்பர் கேமியோ ரோலில் நடித்திருந்தார் சூர்யா. இந்தப் படம் அனைவரையும் கவர சூர்யாவின் கேரக்டரும் முக்கியமான காரணமாக அமைந்தது. இந்த ரோலை வெளியில் சொல்லாமல் தொடர்ந்து சர்ப்பிரைசாக வைத்திருந்தது படக்குழு.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

ஆனாலும் படம் ரிலீசாவதற்கு முன்னதாக இந்த ரோல் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் படத்தின் ரிலீசுக்காக காத்திருந்தனர். படத்தில் இந்த கேரக்டர் ஏற்படுத்திய தாக்கத்தை தற்போது வரை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர்.

சூர்யா பிறந்தநாள்

சூர்யா பிறந்தநாள்

படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகியுள்ள நிலையில், படத்தை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். படம் திரையரங்குகளிலும் ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் வரும் 23ம் தேதி சூர்யா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதற்காக அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

சூர்யா 41 படம்

சூர்யா 41 படம்

கடந்த ஆண்டு பிறந்தநாளை எதற்கும் துணிந்தவன் குழுவினருடன் கொண்டாடி மகழ்ந்தார் சூர்யா. இந்த கொண்டாட்டத்தில் ஜோதிகாவும் கலந்து கொண்டார். தற்போது சூர்யா 41 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ள சூர்யா, யாருடன் இந்த பிறந்தநாளை கொண்டாடுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வாடிவாசல் மேக்கிங் வீடியோ

வாடிவாசல் மேக்கிங் வீடியோ

இதனிடையே சூர்யா பிறந்தநாள் ட்ரீட்டாக பல அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலா இயக்கத்தில் அவர் நடித்துவரும் சூர்யா 41 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முன்னதாக அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் மேக்கிங் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளுடன் மல்லுக்கட்டு

ஜல்லிக்கட்டு காளைகளுடன் மல்லுக்கட்டு

இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் துவங்கப்படவில்லை என்ற போதிலும் முன்னதாக படத்தின் டெஸ்ட் சூட் நடத்தப்பட்டது. இந்த சூட்டிங் வீடியோ கிளிம்ப்ஸ் சூர்யாவின் பிறந்தநாளின்போது வெளியாகவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிப்பதற்காக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா மல்லுக்கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X