அல்லு அர்ஜுனின் ராட்சத கை.. அட்லி இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படத்தின் டைட்டில் இதுதானா?
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் நடித்து வரும் AA22 படத்தின் டைட்டில் நாளை காலை 11 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகும் என்கிற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டது.
ராட்சத கை போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்த கை அல்லு அர்ஜுனின் கை தான் என்றும் எக்ஸ்மேன் படத்தில் ஹீரோவின் கையில் கம்பிகள் வருவது போல அல்லு அர்ஜுன் கையே இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறதா? என்கிற கேள்விகளும் விவாதங்களும் கிளம்பி உள்ளன.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள படத்தின் டைட்டில் குறித்த தகவல்களும் கசிந்துள்ளன. அல்லு அர்ஜுனுக்கு ரொம்பவே பிடித்த டைட்டிலை தான் அட்லி லாக் செய்துள்ளார் என்கின்றனர்.
விஜய் நடிச்சிருக்க வேண்டிய படம்?: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்க வேண்டிய படம் தான் இது என தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு பிறகு பிரம்மாண்டமாக விஜய்யை வைத்து ஒரு படத்தை அட்லி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், ஜன நாயகன் படத்தை கடைசி படமாக தேர்வு செய்த விஜய் அரசியலில் களமிறங்கிய நிலையில், அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இந்த படத்தை இயக்கி வருகிறார் என்கின்றனர்.
ராட்சத கை: ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி தனது குருவான ஷங்கரையே மிஞ்சிவிட்டார். தமிழில் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என 3 ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்த அட்லி இந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி 1000 கோடி படம் கொடுத்த முதல் தமிழ் இயக்குநராக மாறினார். புஷ்பா 2 வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் படத்தை ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், நாளைக்கு அந்த படத்தின் டைட்டில் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாக போகிறது. இந்நிலையில், ராட்சத கை உடன் ஒரு செம அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இதுதான் டைட்டிலா?: அல்லு அர்ஜுனின் மகன் பெயரான 'அயான்' (Ayaan) என்பதைத் தான் அட்லி இந்த படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளதாக சில தகவல்கள் லீக் ஆகியுள்ளன. ஆனால், சன் பிக்சர்ஸ் நாளை அதிகாரப்பூர்வமாக படத்தின் டைட்டிலை அறிவித்து விடும் என்பதால் பொறுமையாக இருப்போம். துரந்தர் 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், புஷ்பா 2 வசூல் சாதனையை முறியடிக்க முடியவில்லை.இந்நிலையில், அடுத்த பெஞ்ச்மார்க் வசூலை அல்லு அர்ஜுன் மீண்டும் செட் செய்வாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











