நஷ்ட ஈடு தரும் வரை சிம்பு புதுப்படத்தில் நடிக்கக் கூடாது: அஅஅ தயாரிப்பாளர் புகார்

By Siva

Recommended Video

தடை செய்தும் புது படத்தில் நடிக்கும் சிம்பு. வெளியானது சிம்பு வைரல் படங்கள் .

சென்னை: எங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கும் வரை சிம்பு புது படங்களில் நடிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் பெரும் பிரச்சனைக்கு பிறகு ரிலீஸானது அனைவருக்கும் தெரியும்.

சிம்பு ட்பிங் பேச வர மறுத்து தன் வீட்டு பாத்ரூமில் அமர்ந்து பேசி அனுப்பியது தனிக் கதை.

நஷ்டம்

நஷ்டம்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகார் மனுவில், சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்தார். டூப் நடிகரை வைத்து பல காட்சிகளை படமாக்கினோம். படம் முடிந்த நிலையில் அதை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்றார். இரண்டாம் பாகத்தில் அவர் நடித்துக் கொடுக்கவில்லை. படப்பிடிப்பில் அவர் ஒத்துழைப்பு அளிக்காததால் படம் திரைக்கு வந்து நன்றாக ஓடவில்லை. இதனால் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதை சிம்பு ஈடு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

பிரச்சனை

பிரச்சனை

ராயப்பன் அளித்த புகாரின்பேரில் தயாரிப்பாளர் சங்கத்தினர் விசாரணை நடத்தி இரு தரப்புக்கும் இடையே சமரச தீர்வு காண முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். இந்த பிரச்சனை தீராத நிலையில் சிம்பு செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்துவிட்டு சுந்தர் சி.யின் படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார். ஜார்ஜியாவில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்ள உள்ளார்.

சுந்தர் சி.

சுந்தர் சி.

சுந்தர் சி. படத்தில் சிம்பு நடிக்க உள்ளது குறித்து அறிந்த மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிம்பு மீது மீண்டும் புகார் அளித்துள்ளார். தனக்கு நியாயம் கிடைக்கும் வரை சிம்பு புது படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது. சிம்பு நஷ்டஈடு தரும் வரை அவர் வேறு படங்களில் நடிக்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் சங்கம் எனக்கு உரிய நஷ்டஈடை பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.

கதறல்

கதறல்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படப்பிடிப்பின்போது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை சிம்பு கதறவிட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது திருந்திவிட்ட சிம்பு செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்து பிரச்சனை எதுவும் செய்யாமல் நடித்துக் கொடுத்தார். இந்நிலையில் ராயப்பன் புகார் குறித்து சிம்பு என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X