அஜீத் படத்தில் நான் இல்லை! - ஆதி
சென்னை: அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க என்னை அழைத்தது உண்மைதான். ஆனால் நான் நடிக்கவில்லை, என்று கூறியுள்ளார் நடிகர் ஆதி.
'வீரம்' படத்திற்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். வில்லியாக தன்ஷிகா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
போலீஸ் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய், ஆதி ஆகிய இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் அருண் விஜய் மட்டும் அஜித்துடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்து அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆதி மவுனம் காத்தார்.
இப்போது ஆதி தன் விளக்கத்தை அளித்துள்ளார். அதில், அஜித் படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்தது உண்மைதான் என்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை, என்றும் கூறியுள்ளார் ஆதி.


Click it and Unblock the Notifications











