தாலி கட்டும் நேரத்தில் பயம்.. நிக்கி கல்ராணியிடம் மேடையில் ஆதி சொன்னது தெரியுமா?.. சூப்பர் ஜோடி பாஸ்
சென்னை: மிருகம் படத்தில் நடித்து அறிமுகமான ஆதி; ஈரம், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மரகத நாணயம் படத்தில் நடித்தபோது நிக்கி கல்ராணியை காதலித்த அவர்; கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு தனக்கு ஏற்பட்ட பயம் குறித்தும்; நிக்கி கல்ராணியிடம் பேசிய விஷயம் குறித்தும் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆதி.
தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த ஆதி; மிருகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சாமி இயக்கிய அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அது தொட்டிருந்த கதைக்களம் அப்போது வரை யாரும் தொடாதது. முதல் பாதியில் கட்டுமஸ்தான உடலோடும், இரண்டாவது பாதியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட உடல் வாகோடும் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருந்தார். இதன் காரணமாக முதல் படத்திலேயே ஆதிக்கு தேவையான நல்ல பெயரும், வெளிச்சமும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஸி நடிகர்: மிருகம் படத்துக்கு பிறகு அவர் நடித்த ஈரம் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து பல படங்களில் நடித்தார். வெற்றியையும், தோல்வியையும் மாற்றி மாற்றி சந்தித்தார். கடந்த வருடத்தில் அவர் நடித்த சப்தம் திரைப்படமும் நல்ல படம் என்றே பெயர் எடுத்தது. ஆனாலும் வணிக ரீதியான வெற்றியை மட்டும் பெறவில்லை. அடுத்ததாக அவர் மரகத நாணயம் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். முதல் பாகம் போன்றே இதுவும் சூப்பர் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் உழைத்துவருகிறது படக்குழு.
நிக்கி கல்ராணியுடன் திருமணம்: இதற்கிடையே மரகத நாணயம் படத்தில் நடித்தபோது நடிகை நிக்கி கல்ராணியை காதலித்தார் ஆதி. அவர்களது காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்தை அடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து நிக்கி கொஞ்சம் ஒதுங்கியிருந்தாலும் முழுமையாக முழுக்கு போடவில்லை. இந்நிலையில் திருமணத்தில் நிக்கி கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு அவரிடம் பேசிய விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ஆதி.
ஆதி பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "திருமண மேடையில் நான் ஏறியதும் நிக்கி கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு எனக்குள் லேசான பயம் ஒன்று இருந்தது. சுற்றிலும் ஒரே பரபரப்பு. நேரம் ஆகிறது என்று எல்லோரும் எங்களை அவசர அவசராமாக அழைத்து கொண்டிருந்தார்கள். அந்த கடுமையான பதற்றத்திலும் நான் நிக்கி கல்ராணீயை தனியாக அழைத்து உன்னிடம் ஒரே ஒரு நிமிடம் மட்டும் பேச வேண்டும் என்று கூறினேன். ஒரு கணவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
யோசித்தது இல்லை: திருமணத்துக்கு பிறகு இப்படித்தான் வாழ வேண்டும் என்ற எந்த ஒரு முன்முடிவையும் நான் என் வாழ்க்கையில் வைத்துக்கொண்டதே இல்லை. அப்படி யோசித்ததுகூட இல்லை. அதேபோல் மனைவி என்றால் கணவருக்காக இதையெல்லாம் எய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டேன். அதுவும் எனக்கு பிடிக்காது. அதனால் நாம் நம் வாழ்க்கை முழுவது, எப்போதும் போல நல்ல நண்பர்களாக இருப்போம் என கூறினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
