ரஜினிகாந்தின் கூலி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் அமீர்கான்?.. அடேங்கப்பா யாரு கூட இருக்காரு பாருங்க!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை கூலி டீமில் வேறலெவலில் கொண்டாடியுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், கூலி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியாகி இருக்கும் அமீர்கான் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் சிறப்பு வேடத்தில் நடிகர் அமீர்கான் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ஷாருக்கான் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில், நான்கு ஆண்டுகள் ஓய்வெடுத்து விட்டு பின்னர் மீண்டும் வரிசையாக மூன்று படங்களை கொடுத்து கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தினார்.
கொஞ்ச நாள் ஓய்வு: தங்கல் படத்தின் வெற்றிக்கு பிறகு அமீர்கான் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான், லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதன் பின்னர் சில ஆண்டுகள் நடிக்கப் போவதில்லை என அமீர்கான் ஓய்வெடுத்துள்ளார். தனது மகள் திருமணத்தை நடத்தி முடித்து அமிர்கான். தனது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட சந்திப்பின் காரணமாக, லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் அமீர்கான்: கூலி படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் நிலையில், அமீர்கான் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கூலி படத்தின் நடிகர்களுடன் அமீர்கான் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உபேந்திராவுடன் அமீர்கான்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாகீர், சுருதிஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், உபேந்திரா உடன் நடிகர் அமீர் கான் இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. உபேந்திராவின் UI படத்தின் டிரெய்லரையும் பார்த்துவிட்டு அமீர்கான் பாராட்டியுள்ளார். கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் கிளைமாக்ஸில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா எப்படி நடித்து வெறித்தனம் காட்டினாரோ அதைவிட பல மடங்கு அமீர் கானின் கேமியோ இருக்கும் என சினிமாவட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் ரஜினிகாந்த் உடன் அமீர்கான் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடி கன்ஃபார்ம்: தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு படம் கூட 1000 கோடி வசூலை கடக்கவில்லை என்றும் அதற்கு காரணம் இந்தியில் நம்மவூர் படங்கள் பெரிதும் ரசிகர்களை கவர்வதில்லை என்பதுதான். புஷ்பா 2 திரைப்படம் பாலிவுட்டில் பெரிதாக ஓடக் காரணமும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த நபராகவே அல்லு அர்ஜுனை மாற்றியது தான் என்கின்றனர். 400 கோடி ரூபாய் வரை இந்தியில் புஷ்பா 2 வசூல் செய்துள்ளது. அதே அளவுக்கு கூலி படம் வசூல் செய்ய அமீர்கான் கேமியோ உதவியாக இருக்கும் என எதிர்பார்கக்ப்படுகிறது. அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர் நடித்த வேட்டையன் திரைப்படம் பெரிதாக ஓடாததற்கு காரணம் அது கன்டென்ட் படம் என்றும் கூலி ஜெயிலர் திரைப்படத்தை போல மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகி ரசிகர்களை கவரும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











