விளம்பரத்தில் நடிக்க ரூ.88 கோடி வாங்கும் அமீர் கான்
பாலிவுட் நடிகர் அமீர் கான் ஒரு விளம்பரப்படத்தில் நடிக்க ரூ.88 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமாவை விட விளம்பரத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர் இன்றைய நடிகர்கள். காரணம் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. கவிதையாய் சொல்லும் விளம்பரங்கள் மக்களிடம் எளிதில் சென்றடைகிறது.
நடிகர்கள் உபயோகிக்கும் பிராண்டுகளை ரசிகர்களும் பின்பற்றுகின்றனர் என்பதாலேயே விளம்பரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தவிர கைமேல் அதிக காசும் கிடைக்கிறது.
இந்திப் பட உலகில் சல்மான், ஷாரூக், அமீர் போன்ற பிரபல நடிகர்களும், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் போன்ற நடிகைகளும் விளம்பரப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அமீர் கான் ரூ. 88 கோடி
சினிமாவைப் போல சின்னத்திரை உலகிலும் பிரபலமடைந்துள்ள அமீர்கான் ரூ.88 கோடிக்கு விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளாராம்.

கரீனா கபூர்
டெல்லியை அடிப்படையாகக் கொண்ட கட்டுமானக் கம்பெனி ரூ.10 கோடிக்கு கரீனா கபூரை ஒப்பந்தம் செய்துள்ளது.

கத்ரீனா கைப்
பெயிண்ட் விளம்பரம் ஒன்றில் நடிக்க கத்ரீனா கைப் ரூ. 8 கோடி பெற்றுள்ளாராம்.

ரன்பீர் கபூர்
குளிர்பான விளம்பரத்தில் நடிக்க ரன்பீர் கபூர் வாங்கும் சம்பளம் 8 கோடியாம்.

சல்மான் சம்பளம் ரூ.20 கோடி
சல்லு நிறைய விளம்பரத்தில் நடிக்கிறார். கோலா விளம்பரத்தில் நடிக்க மட்டும் அவருடைய சம்பளம் 20 கோடி ரூபாயாம்.

நம் ஊர் நடிகர்கள்
நம் ஊரிலும் விஜய், சூர்யா, பிரசன்னா, விக்ரம், மாதவன் போன்ற பிரபல நடிகர்கள் பலரும் விளம்பரம் மூலம் அதிக அளவில் கல்லா கட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











