ஆமீர் கான் விடுத்த நிர்வாண சவால்: ஏற்பாரா நண்பன் சல்மான் கான்?
மும்பை: தான் பி.கே. பட போஸ்டருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது போன்று தனது நண்பன் சல்மான் கானும் போஸ் கொடுப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆமீர் கான்.
ஆமீர் கான் பி.கே. படத்தில் நடித்து வருவது பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தான் ஒரு நாள் பி.கே. படத்தின் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் ஆமீர் கான் நிர்வாணமாக நின்றது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. அது எப்படி ஆமீர் இப்படி நிர்வாணமாக போஸ் கொடுக்கலாம் என்று எதிர்ப்புகள் கிளம்பின.
ஆனால் ஆமீரோ தான் நிர்வாணமாக போஸ் கொடுத்ததை கலை என்று கூறி நியாயப்படுத்துவிட்டு அவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.

2வது போஸ்டர்
முதல் போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் ஆமீர் நேற்று 2வது போஸ்டரை வெளியிட்டார். நல்ல வேளை இதில் முழுதாக ஆடை அணிந்திருந்தார்.

தூம் 3 தொப்பி
நான் தூம் 3 படத்தில் அணிந்திருந்த தொப்பி மக்களை மட்டும் அல்லாமல் சல்மான் கானையும் கவர்ந்தது. அவர் அதே போன்ற தொப்பியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அணிந்திருந்தார் என்றார் ஆமீர்.

நிர்வாணம்
சல்மான் என்னை பார்த்து தொப்பி அணிந்தார். அவர் படங்களில் சட்டை இல்லாமல் வந்துள்ளார். பேண்ட்டும் இல்லாமல் வருவாரா என்று பார்ப்போம் என்று கூறி சிரித்தார் ஆமீர்.

ஆடை
பி.கே. போஸ்டரில் ஆபாசம் இலல்லை. ஆபாசம் என்பது ஆடையில் இல்லை, நம் சிந்தனையில், பேசுவதில் தான் உள்ளது என்று தெரிவித்தார் ஆமீர் கான்.

கதாபாத்திரம்
பி.கே. படத்தில் ஆமீர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. போஸ்டரில் அவர் கொடுத்த அதிர்ச்சி தான் அனைவருக்கும் பெரிதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











