‘தூம்-3' ஆடியோ சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணிப்பு: அமீர்கான்
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தன்னுடை தூம் 3 படத்தின் பாடல்களை கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் வரும் 14-18 தேதிகளில் தனது சொந்த ஊரான மும்பை வாங்கடே மைதானத்தில் தனது 200ஆவது டெஸ்ட் போட்டியை விளையாட இருக்கின்றார்.
மேற்கு இந்தியத் தீவு அணிகளுடன் விளையாடும் இந்தப் போட்டியுடன் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகின்றார். கிரிக்கெட் உலகில் 25 வருடங்களாக தனது முத்திரையைப் பதித்த இந்த அற்புதமான வீரருக்கு தங்களுடைய படத்தின் தலைப்புப் பாடலை அர்ப்பணிக்க ஆமீர்கான் உள்ளிட்ட திரைப்படக்குழு முடிவு செய்துள்ளது.

தூம் 3
இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற 'தூம்' திரைப்படங்களின் வரிசையில் தற்போது 'தூம்-3' வெளியாக உள்ளது. ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.

அமீர்கான்-அபிஷேக்
இந்த திரைப்படத்தில் அமீர்கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா மற்றும் காத்ரீனா கைப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாடல் அர்ப்பணிப்பு
தூம் 3 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த படத்தின் பாடல்களை சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணிக்க உள்ளதாக படத்தின் ஹீரோ அமீர்கான் கூறியுள்ளார்.

கிரிக்கெட் நாயகன்
சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் விளையாட்டுக் காலம் முழுவதும் தான் விளையாடிய ஒவ்வொரு ஆடுகளத்திலும், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பந்து வீச்சாளரின் கனவிலும், நம் இதயங்களிலும், உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்திலும் தன்னுடைய ஆட்டத்திறமையினால் அபரிமிதமான பிரமிப்பை ஏற்படுத்தினார்.

பாடல்கள் அர்ப்பணிப்பு
அந்த மேதைக்கு சரியாகப் பொருந்தும் விதத்தில் உள்ள எங்களின் தலைப்புப் பாடலான தூம் மச்சலேவை நாங்கள் அவருக்கு அர்ப்பணிக்கின்றோம் என்று அமீர்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் மும்பையில் சச்சின் விளையாடத் துவங்கும்முன் இந்தப் பாடல் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











