நிர்வாணமாக போஸ் கொடுத்ததை நியாயப்படுத்தும் ஆமீர் கான்
மும்பை: பி.கே. பட போஸ்டருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததை நடிகர் ஆமீர் கான் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆமீ்ர் கான் பி.கே. படத்திற்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததும் கொடுத்தார் மீடியாக்கள், மக்கள் எல்லாம் அதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய நடிகர் இப்படியா போஸ் கொடுப்பார் என்று ரசிகர்கள் குமுறுகிறார்கள்.
ஏன் ஆமீருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆமீர் கூறுகையில்,

கலை
பி.கே. பட போஸ்டருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது கலை ஆகும். அதை நான் விளம்பரத்திற்காக செய்யவில்லை.

படம்
படத்தை பார்த்தால் போஸ்டருக்கு ஏன் அப்படி போஸ் கொடுத்தேன் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்.

ராஜ்குமார் ஹிரானி
பி.கே. படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி எதையும் வித்தியாசமாக செய்பவர். அவரின் மிகப்பெரிய ரசிகன் நான்.

தாரே ஜமீன் பர்
நான் தயாரித்து இயக்கிய தாரே ஜமீன் பர் படத்தின் போஸ்டரில் அந்த குழந்தை வகுப்பறையில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும், நான் அதன் பின்னால் உட்கார்ந்திருப்பேன். அதில் இருந்து கதை புரியும். பி.கே. படத்தின் போஸ்டரும் அப்படித் தான் என்றார் ஆமீர்.


Click it and Unblock the Notifications











