ஆமீருக்கு முன்பு நிர்வாணமாக நடித்த ஷாருக், 'கத்தி' வில்லன், ரன்பிர் கபூர்
மும்பை: படத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த முதல் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இல்லை.
பாலிவுட் நடிகர் ஆமீ்ர் கான் என்றால் சூப்பராக நடிப்பார் என்று இத்தனை நாட்கள் கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் பி.கே. பட போஸ்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து அனைவரின் கிண்டல் பேச்சுக்கு ஆளாகியுள்ளார்.
ஆனால் பாலிவுட்டில் ஆமீருக்கு முன்பு பல நடிகர்கள் இப்படி நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர்.

நீல் நிதின் முகேஷ்
விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக நடித்து வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் கடந்த 2009ம் ஆண்டு ரிலீஸான ஜெயில் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார்.

ஜான் ஆபிரகாம்
நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்த நியூயார்க் படத்தில் அவர் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்குமார் ராவ்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸான ஷாஹித் படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் ஒரு காட்சியில் நிர்வாணமாக அமர்ந்திருந்தார்.

ஷாருக்கான்
ஷாருக்கான் பாலிவுட்டில் நடிகராக போராடிக் கொண்டிருந்த காலத்தில் வெளியான மாயா மீம்சாப் படத்தில் அவரும், நடிகை தீபா சாஹியும் படுக்கையறை காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தனர்.

ரன்பிர் கபூர்
கடநத் 2007ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான சாவரியா படத்தில் ரன்பிர் கபூர் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











