நைட் ஃபுல்லா குடிப்பேன்.. நான் போட்ட ஆட்டமே வேற.. ஓபனாக ஒத்துக்கொண்ட கூலி பட நடிகர்.. யார் தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடிகர் அமீர் கான் நடித்து வருவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு இருந்த குடிப்பழக்கம் பற்றி பேசி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அமீர் கானை மிஸ்டர் பெர்ஃபெக்ட் என்றே ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் மொடா குடிகாரராக இருந்தாரே என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலையிலேயே குடிப்பார் என ராதாரவி உள்ளிட்டோர் பேட்டியளித்த நிலையில், தனது குடிப்பழக்கம் குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதுவும் உங்க வீட்டுக் குடி எங்க வீட்டுக் குடியெல்லாம் இல்லை என்றும் நைட் ஃபுல்லா குடிப்பேன் என்றும் ஆரம்பித்துவிட்டால் தன்னை யாரும் கன்ட்ரோலே செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே நம்பர் ஒன்: கடந்த 2016ம் ஆண்டு வெளியான தங்கல் படம் தான் இதுவரை வெளியான இந்திய படங்களிலேயே 2000 கோடி ரூபாய் வசூலை ஈட்டி முன்னிலையில் உள்ளது. கடந்த சில வருடங்களாக படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், சின்ன பிரேக் விட்டுள்ள அமீர்கான் மீண்டும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

கூலி படத்தில் அமீர்கான் கேமியோ: பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான் நடிப்பில் கடைசியாக வெளியான தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான், லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஓய்வெடுப்பதாக அறிவித்த அமீர்கான் தற்போது மீண்டும் பாலிவுட்டில் சில படங்களிலும் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்திலும் நடித்து வருகிறார்.
நைட் எல்லாம் குடிப்பேன்: ரீனா தத்தா என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட அமீர் கான் 2002ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர் உதவி இயக்குநர் கிரண் ராவை திருமணம் செய்துக் கொண்டவர் அவரையும் கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து செய்து டாட்டா காட்டிவிட்டார். தங்கல் படத்தில் மகளாக நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக் என்பவரை அமீர் கான் காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக வதந்திகள் வெளியாகின. ஆனால், இதுவரை அடுத்த திருமணம் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் அமீர் கான் வெளியிடவில்லை. இந்நிலையில், மது போதைக்கு ஒரு காலத்தில் தான் அடிமையாக இருந்தேன் என்றும் இரவு முழுக்க குடிப்பேன் என்றும் அமீர் கான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இப்போ இல்லை: ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பாகவே மது அருந்துவதை தான் விட்டு விட்டேன் என்றும் அப்போது தன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாத சூழல் இருந்தது. அது தவறு என்று தனக்குத் தெரிந்தும் நிறுத்த முடியாமல் அவதிப்பட்டேன். காலம் போன பின்னர் தான் நான் செய்த தவறுகளை புரிந்துக் கொண்டேன் என அமீர் கான் கூறியுள்ளார். பல சினிமா பிரபலங்களும் பணம், புகழ் என கிடைத்தவுடன் முதலில் மதுவுக்குத் தான் அடிமையாகி விடுகின்றனர். அதை அளவுடன் நிறுத்திக் கொண்டால் சினிமாவில் ஜொலிக்கலாம் என்றும் அளவுக்கு மீறி போனால் தொழிலில் அக்கறை செலுத்த முடியாமல் ஃபீல்ட் அவுட் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறி நிற்கிறது.


Click it and Unblock the Notifications











