தூம் 4ல் ஆமீர் அஜீத்துக்கு வழிவிட வேண்டும்: முணுமுணுக்கும் கோலிவுட்
சென்னை: தூம் 4 படத்தில் அஜீத் குமாரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று கோடம்பாகத்தில் பேச்சு அடிபடுகிறது.
ஆமீர் கான் வில்லனாக நடித்துள்ள தூம் 3 படத்தின் ரிலீஸை பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. வழக்கமாக ரொம்ப நல்லவராக நடிக்கும் ஆமீர் கான் இந்த படத்தில் கெட்டவனாக, திருடனாக நடித்துள்ளார்.
தூம் 3 படமே இன்னும் ரிலீஸாகவில்லை. ஆனால் அதற்குள் கோடம்பாக்கத்தில் தூம் 4 படத்தை பற்றிய பேச்சு கிளம்பிவிட்டது.

அஜீத்
தூம் 4 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்றவர் அஜீத் குமார் தான் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. அஜீத் வாலி, மங்காத்தா ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தி இருப்பார்.

பைக், கார்
அஜீத் பைக் பிரியர் அல்ல வெறியர். அவர் கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளார். தூம் படத்தின் சிறப்பு அம்சமே வில்லன் பைக், காரில் வித்தை காட்டுவது தான். அது அஜீத்துக்கு அல்வா சாப்பிடுவது போன்று என்று கோடம்பாக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்
தூம் 4 படத்திற்கு அஜீத் தான் சரியானவர் என்பதை பாலிவுட்காரர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ அவர் தான் நச்சென்ற வில்லன் என்று தமிழ் சினிமா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டைல் ஸ்டார்
அஜீத் குமார் ஸ்டைலான நடிகர். அவர் தூம் 4 படத்தில் நடித்தால் அது வெற்றி பெறும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பம்
ஆரம்பம் படத்தில் வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும் ஓடி இருக்காது. அஜீத்தால் தான் படம் ஓடியது என்று முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான், ரித்திக்
தூம் 1 மற்றும் தூம் 2 படங்களில் ஜான் ஆபிரகாம் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் வில்லனாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











