பஹல்காம் தாக்குதல்.. அவர்கள் எல்லாம் முஸ்லீம்களே இல்லை.. ஆவேசமான அமீர் கான்
மும்பை: பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் அமீர் கான். ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர் இதுவரை தமிழில் நடிக்காமல் இருந்தார். அதனை போக்கும் விதமாக ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இதுதவிர்த்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்னொரு படத்திலும் அவர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து பேசியிருக்கிறார் அவர்.
ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருஅர் அமீர் கான். கமர்ஷியல் பாதையை மட்டும் தேர்ந்தெடுக்காமல் ஃபெர்ஃபாமென்ஸுக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். தமிழில் வெளியாகி சக்கைப்போடு போட்ட கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தவர் அமீர்தான் என்பது அனைவருமே அறிந்ததுதான். அவர் தமிழ் படத்தை ரீமேக் செய்து நடித்தாலும் நேரடி தமிழ் படத்தில் நடிக்காமல் இருந்தார்.
கூலி அமீர்: இப்படிப்பட்ட சூழலில்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியபோது கூலியில் தனது கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும். ரஜினியின் படம் என்று சொன்னவுடனேயே ஒத்துக்கொண்டேன். நான் ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய ரசிகன் என்று தெரிவ்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் இயக்கத்தில்: கூலி பட பணிகளின்போது லோகேஷின் வொர்க்கிங் ஸ்டைல் அவருக்கு பிடித்துப்போக; கூலி தவிர்த்து இன்னொரு படத்திலும் அவர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அமீர் கான். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படமானது சூப்பர் ஹீரோ ஜானரில் உருவாகவிருப்பதாகவும் தெரிகிறது. இதற்கிடையே தாரே ஜமீன் பர் படத்தின் இரண்டாவது பாகமாக சிதாரே ஜமீன் பர் படம் உருவாகியிருக்கிறது. 20ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் சூழலில் அதற்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன.
அமீர் கான் பேட்டி: இந்நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமீர் கான், "பஹல்காம் தாக்குதல் கொடூரமானது. அவர்கள் நமது நாட்டிற்குள் நுழைந்து சாதாரண மக்கள் மீது துப்பாக்கி சூடு நடித்தியது அவர்களது கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது. நீங்களோ அல்லது நானோகூட அங்கே இருந்திருக்கலாம். நான் சோஷியல் மீடியாவில் இல்லை. ஆனால் மக்கள் இந்த விஷயத்தில் உடனடியாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். இத்தாக்குதல் நடந்த பிறகு நான் கலந்துகொண்ட் நிகழ்ச்சியில், நமது நாட்டின் மீது மட்டுமில்லை ஒற்றுமையின் மீதே நடத்தப்பட்ட தாக்குதல் என்று பேசினேன்.
வலி இருந்தது: ஒவ்வொரு இந்தியரை போலவே எனது இதயத்திலும் நிறைய கோபமும் வலியும் இருந்தன. உண்மையில் நான் மன சோர்வுக்கு ஆளானேன். பல நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. எனது தேசபக்தி எனது படைப்புகளில் பிரதிபலிக்கிறது. ரங் தே பசந்தி, லகான் ஆகிய படங்கள பார்த்தால் தெரியும். வேறு எந்த நடிகரும் என்னைவிட அதிக தேச பக்தி படங்களை செய்ததாக நான் நினைக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன்.
முஸ்லீம்களே இல்லை: எந்த மதமும் மக்களை கொல்ல சொல்லவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லீம்களே இல்லை. பயங்கரவாதிகளை நான் இஸ்லாமியர்களாகவே கருதவில்லை. எந்த அப்பாவி மனிதனை, பெண்ணை, குழந்தையை தாக்கக்கூடாது என்று இஸ்லாமியத்தில் இருக்கிறது. தீவிரவாதிகள் இந்த செயல் மூலம் தங்கள் மதத்துக்கு எதிராக செல்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











