இப்படியொரு சூப்பர் ஸ்டாரை இனிமே பார்க்க வாய்ப்பே இல்லை.. ரஜினிகாந்த் காலில் விழுந்த அமீர்கான்!

சென்னை: திரையுலகில் கேட்டை திறந்துக் கொண்டு கருப்பா இருந்தா ஹீரோவா நடிக்கக் கூடாதா என உள்ளே வந்து சூப்பர் ஸ்டாராக மாறி ரஜினிகாந்த் தனது 50வது திரையுலக பயணத்தை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு அடுத்த வாரம் கூலி எனும் மெகா பிளாக்பஸ்டர் படத்தை பரிசாக கொடுக்க காத்திருக்கிறார்.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் கூலி படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகிறது. அடுத்த வாரம் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த இசை வெளியீட்டு விழா பெரிய ப்ரோமோஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aamir Khan touched Rajinikanth feet and seeks blessings at Coolie audio launch video goes viral
Photo Credit:

கூலி படக்குழுவினர் ஹைதராபாத்தில் ஒரு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தினர். மும்பையில் உள்ள மெட்ரோ ரயில்களில் எல்லாம் கூலி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வார் 2 படத்துக்கு அந்த ஏரியாவிலும் கடும் போட்டியை கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், கூலி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த அமீர்கான் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்: பாட்ஷா படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாட்ஷா தான் ஊருக்கெல்லாம் என்ற வரிகளை போல இந்திய சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் அது ரஜினிகாந்த் தான் என கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பல பிரபலங்களும் பேசினர். 50 வருடங்களாக தனது 75 வயதிலும் நடந்து சென்றுக் கொண்டே சிகரெட்டை வாயில் ஸ்டைலாக வைத்து மிகப்பெரிய ஹைப்பை கிளப்ப முடியும் என்றால் அது நம்ம ரஜினிகாந்தால் தான் முடியும் என ரசிகர்கள் கூலி படத்தை பார்க்க கொண்டாடி வருகின்றனர்.

டிக்கெட் புக்கிங் இன்று முதல்: வெற்றி திரையரங்கம் நேற்றே ட்வீட் போட்டு விட்டது. இன்று முதல் கூலி படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வெளியாகவுள்ள கூலி படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று முதல் தமிழ்நாட்டிலும் தொடங்குகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 6 மணிக்கு கூலி படம் வெளியாகிறது. ஆனால், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத் தான் முதல் ஷோ வெளியாகும் என தெரிகிறது. காலையிலேயே படத்தை பார்க்க பெங்களூருவுக்கு பலரும் படையெடுக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர்.

காலில் விழுந்த அமீர்கான்: இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் காலில் விழுந்துள்ளார். அவருக்கு அடுத்து பல பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி வாங்கும் காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவிலேயே 2 ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையை படைத்த அமீர்கான் நடிகர் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி வாங்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. கூலி இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினிகாந்த் என்ட்ரி கொடுத்த போது நாகார்ஜுனா அவரை கட்டித் தழுவினார். அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, அருகே இருந்த அமீர்கானும் சூப்பர் ஸ்டார் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X