அடுத்த போஸ்டரில் டேப்ரிக்கார்டர் இல்லாமல் முழு நிர்வாணமாக வரும் ஆமீர் கான்
மும்பை: பி.கே. படத்தின் அடுத்த போஸ்டருக்கு தான் கையில் டேப் ரிக்கார்டர் கூட இல்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்திருப்பதாக நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான் நடித்து வரும் பி.கே. படத்தின் போஸ்டரில் நிர்வாணமாக நின்றார். ரயில் தண்டவாளத்தில் நிர்வாணமாக நின்ற ஆமீர் கையில் டேப் ரிக்கார்டரை வைத்து மானத்தை மறைந்திருந்தார்.
இந்த போஸ்டருக்கே நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

வழக்கு
ஆமீர் கான் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தடை
ஆமீர் நிர்வாணமாக வரும் பி.கே. படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

அடுத்த போஸ்டர்
பி.கே. படத்தின் அடுத்த போஸ்டர் வரும் 20ம் தேதி வெளியிடப்படுகிறது. அதில் நான் கையில் டேப் ரிக்கார்டர் கூட இல்லாமல் நிர்வாணமாக நிற்பேன் என்று ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

ஏன் இப்படி?
ஆமீரை தலையில் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் அவர் இப்படி நிர்வாண கோலத்தில் போஸ் கொடுப்பதை நினைத்து தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

போஜ்புரி
பி.கே. படத்தில் ஆமீர் போஜ்புரி மொழியில் பேசி நடிக்கிறார். இதற்காக அவர் இரண்டு ஆண்டுகளாக போஜ்புரி கற்றுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











