சூர்யா பல படங்களை விடுறாரே?.. இரும்பு கை மாயாவி அந்த ஹீரோ கைகளிலா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. முக்கியமாக பிளாஷ்பேக் போர்ஷனை நெட்டிசன்கள் வைத்து செய்துவிட்டார்கள். இதனால் லோகேஷின் கரியரில் லியோதான் தோல்வி படமாக அமைந்துவிட்டது. அடுத்ததாக அவர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார். இந்தச் சூழலில் அவர் இயக்குவதாக இருக்கும் இரும்பு கை மாயாவி படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து. முக்கியமாக லோகேஷின் மேக்கிங்கை பார்த்த ரசிகர்கள் படத்தின் டைட்டில் கார்டிலிருந்து க்ளைமேக்ஸ்வரை திரைக்கதையில் பின்னியெடுத்துவிட்டார். முதல் பட இயக்குநர் மாதிரியே தெரியவில்லையே என்று ஓபனாக தங்களது வரவேற்பை கொடுத்தார்கள். இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் பெற்ற இயக்குநராக மாறினார் அவர்.

வரிசையாக ஹிட்டுகள்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் கதையை முதலில் மன்சூர் அலிகானுக்குத்தான் எழுதினார். ஆனால் அந்த சமயத்தில் மன்சூர் சிறை சென்றதால் கார்த்தியிடம் இந்தக் கதை சென்றது. ஒரு இரவில் நடக்கும்படி திரைக்கதையை எழுதி அதை அசால்ட்டாகவும் கெத்தாகவும் மேக்கிங் செய்து மெகா ஹிட் படமாக கைதியை கொடுத்துவிட்டார் லோகேஷ். இதனால் அவர் மேற்கொண்டு தமிழ் சினிமாவில் ஃபேமஸ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யுடன் கூட்டணி: முதல் இரண்டு படங்கள் வெற்றி பெற்றதையடுத்து விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மாஸ்டர் படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்துக்கு பிறகு கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. முக்கியமாக விக்ரம் படத்தின் ஹிட் லோகேஷ் கனகராஜை இந்திய அளவில் மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
சறுக்கிய லோகி: இப்படிப்பட்ட சூழலில் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார் லோகேஷ். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. முக்கியமாக பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கிவரும் அவர் அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களையும் இயக்கவிருக்கிறார். இதற்கிடையே சூர்யாவை வைத்து இரும்பு கை மாயாவி என்ற படத்தையும் அவர் இயக்கவிருக்கிறார். அதைத்தான் முதல் படமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இருந்தார்.
ஆமிர் கான் கைகளில்?: இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கூலி படத்தின் ஷூட்டிங்கின்போது இரும்பு கை மாயாவி படத்தின் கதையை லோகேஷ் ஆமிரிடம் சொன்னதாகவும் அதற்கு ஆமிர் ஓகே சொல்லிவிட்டதாகவும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.மேலும் சூர்யாவிடம் கால்ஷீட் பிரச்னை இருந்ததால் இந்தப் படத்தின் மீது ஆர்வம் காட்டாமல் இருந்தார் என்றும் அதனால்தான் லோகேஷ் ஆமிர் கானிடம் கதையை சொன்னதாகவும் ஒரு தகவல் ஓடிகொண்டிருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், சூர்யாவுக்கு கெட்ட நேரம் ஆரம்பமாகிடுச்சு போல. புறநானூறை விட்டது போல் இதனையும் விடுகிறாரே என்று கவலையுடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











