அமீர் கானின் மகள் திருமணம்.. டவுசரோடு மணமேடைக்கு வந்த மாப்பிள்ளை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

மும்பை: பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகள் திருமணத்தில் மாப்பிள்ளை வித்தியாசமாக வருகிறேன் என்று நினைத்து கொண்டு மணமேடைக்கு பனியன் மற்றும் டவுசருடன் வந்து திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இணையவாசிகளை கடுப்பாக்கி உள்ளது. அந்த திருமணத்தில் பாலிவுட்டின் பல முன்னணி நடிகர்கள், பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் அமீர்கான். இவர் 1978 Yaadon Ki Baaraat என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை அடுத்து, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் Raakh,Dil, Rangeela, Raja Hindustani, ishq என பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படங்களில் நடித்து திறமையான நடிகர் என பெயர் எடுத்தார். Raja Hindustani திரைப்படத்தில் கரீஷ்மா கபூருடன் ஜோடி போட்டு நடித்தார்.

Aamir Khans daughter Ira Khans wedding groom came to the stage with a trouser

2001ம் ஆண்டு விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியானத் திரைப்படம் லகான். இத்திரைப்படத்தில், ஒரு அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அமீர்கான். இத்திரைப்படம் 7 தேசிய விருதுகளையும், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அதே போல அமீர் கான் நடிப்பில் வெளிவந்த PK திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுத்தந்தது.

நடிகர் அமீர்கான்: பல திறமைகளைக் கொண்ட அமீர்கான் 1986ம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, 2005ம் ஆண்டு லகான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரண் ராவ்வை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகனும் இருக்கிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துள்ளதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர்.

Aamir Khans daughter Ira Khans wedding groom came to the stage with a trouser

கோலாகலமாக நடந்த திருமணம்: இந்நிலையில் அமீர்கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தத்தாவின் மகளான இரா கான். இவருக்கும் உடற்பயிற்சியாளராக நுபுர் ஷிக்காரேவுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில், மாப்பிள்ளை நுபுர் திருமண ஆடைகளை அணியாமல் உடற்பயிற்சிக்கான பனியன் மற்றும் டவுசருடன் வீட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து திருமண மண்டபத்தை அடைந்திருக்கிறார். மேலும், அதே ஆடையுடனே திருமண ஒப்பந்தத்தை படித்து விட்டு இருவரும் கையெழுத்திட்டனர்.

இதெல்லாம் வித்தியாசமா: பாலிவுட்டின் டப் நடிகரான அமீர் கானின் மகளின் திருமணத்தில் தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவருடைய மனைவியுடன் கலந்து கொண்டார். அதே போல பல பிரபலங்களும் மார்டன் மார்டனாக விலை உயர்ந்த ஆடையை அணிந்து கொண்டு கலந்து கொண்ட நிலையில், திருமணத்தில் வித்தியாசத்தை காட்டுகிறேன் என்று மாப்பிள்ளை டவுசருடன் நின்றது குறித்து நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், இத்திருமண நிகழ்வில் பங்கேற்ற தன் முன்னாள் மனைவி கிரண் ராவுக்கு அமீர் கான் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X