ரசிகர்கள் பற்றி அஜித் இதைத்தான் சொல்வார்.. விடாமுயற்சி நடிகர் ஆரவ் ஓபன் டாக்
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் விடாமுயற்சி குறித்தும் அஜித் குறித்தும் ஆரவ் பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித் நடித்த படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். காலை 9 மணி காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு தங்களது கலவையான விமர்சனத்தை கொடுத்துவருகின்றனர். அதேசமயம் அஜித்தின் நடிப்பு பக்காவாக இருக்கிறது என்றும் கூறினார்கள். இந்நிலையில் அஜித் குறித்து ஆரவ் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

ஆரவ் பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "விடாமுயற்சி படம் இன்று வெளியாகியிருப்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. மக்கள் மீதும், ரசிகர்கள் மீதும் நம்பிக்கை ரொம்பவே இருக்கிறது என்று எப்போதுமே அஜித் சொல்லிக்கொண்டே இருப்பார். இந்த மாதிரியான ஒரு படம் கண்டிப்பாக வரவேற்பை பெறும் என்றும் கூறினார். அஜித்தின் ரசிகனான நான் இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருந்தது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் அனைவரது கடின உழைப்பையும் மக்கள் பார்ப்பார்கள்.
ரசிகர்கள் பற்றி: அஜித் எப்போதுமே ரசிகர்கள் பற்றி பேசுவார். அவர்கள் மீது அதீத அக்கறை கொண்டிருப்பார். அதனால்தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரசிகர்களுக்கு ஏதோ ஒரு மெசேஜை சொல்லிக்கொண்டே இருக்கிறார். நேற்றுகூட அஜித்திடம் பேசினேன். பட ரிலீஸுக்கு அவர் எனக்கு வாழ்த்து கூறினார்" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
ஆரவ்வை திட்டும் ரசிகர்கள்: இதற்கிடையே இன்று வெளியான விடாமுயற்சி படத்தில் ஆரவ்வின் நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. அதேசமயம் அஜித்தை படத்தில் பூமர் என்று ஆரவ் சொல்லும்படி காட்சியும் இருப்பதன் காரணமாக அந்தக் காட்சியின்போதெல்லாம் தியேட்டரில் ஆரவ்வை திட்டி தீர்த்துவிடுகிறார்கள் ஏகேவின் ரசிகர்கள். இதேபோல்தான் மங்காத்தா படத்திலும் அஜித்தை அடிக்கும் காட்சியில் நடித்ததால் நடிகர் வைபவ்வை ஏகேவின் ரசிகர்கள் திட்டினர் என்பது நினைவுகூரத்தக்கது.
படம் ஓகேதான்: அஜித், ஆரவ், அர்ஜுன், திரிஷா ஆகியோரின் நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருந்தாலும்; மகிழ் திருமேனி மேக்கிங்கில் மொத்தமாக சொதப்பிவிட்டார் என்று ரசிகர்கள் ஓபனாக கூறுகிறார்கள். அதேசமயம் அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது என்றும் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











