ஜெயம் ரவிதான் ரொம்ப ஆசைப்பட்டார்.. ஓபனாக பேசிய ஆர்த்தி.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக நேற்று அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உருக்கமாக பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். 15 வருடங்களாக அன்யோன்யமாக வாழ்ந்துவந்த அவர்கள் இப்போது பிரிந்திருப்பது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அதற்கு என்ன காரணம் என்று பலரும் புலன் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

ஜெயம் ரவி கல்லூரியில் படித்தபோது ஆர்த்தியை காதலித்து 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பிரமாண்டமாக பல சிறப்பு விருந்தினர்களோடு அந்தத் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆரவ், ஆயன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். டிக் டிக் டிக் படத்தில் மூத்த மகன் ஆரவ் நடித்திருந்தார். ரவியும், ஆர்த்தியும் ஒருவரையொருவர் மதித்தும், காதலை கொடுத்தும் வாழ்ந்துவந்தனர். ஆனால் கடந்த சில காலமாகவே அவர்களுக்குள் பிரச்னை என்று பேச்சுக்கள் எழுந்தன.

jayam ravi aarthi

ஜெயம் ரவியின் அறிவிப்பு: சூழல் இப்படி இருக்க இன்று ஜெயம் ரவி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார் அவர். அதில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாகவும்; கனமான முடிவு எடுத்திருந்தார். முக்கியமாக தனக்கு நெருக்கமானவர்களின் நலன் கருதி திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக முடிவு எடுத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதன் காரணமாக யாருக்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.

அமைதியான ஆர்த்தி: ஆனால் ரவியின் மனைவி ஆர்த்தியோ இதுவரை மௌனமே காத்துவருகிறார். அதுமட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ரவி பெயரையும், Married To Ravi என்பதையும் நீக்கவில்லை. இதனால் மேற்கொண்டு பல சந்தேகங்களை ரசிகர்களும் திரைத்துறையினரும் கிளப்பிவருகிறார்கள். இதற்கிடையே இந்தப் பிரச்னையின் ஆரம்பப் புள்ளியை வைத்ததே ஜெயம் ரவியின் மாமியார்தான் என்றும் பலர் பேசுகிறார்கள்.

ஆர்த்தி பேட்டி: இந்நிலையில் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் இணைந்து கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய ஆர்த்தி, "எனக்கு முதல் குழந்தை பிறக்கும்போது ரவி என்னுடன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அந்த சமயத்தில் குழந்தை எனக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே பிறந்துவிட்டது. அப்போது அவர் எங்கேயும் காதல் படத்தின் ஷூட்டிங்கிற்காக பாரிஸில் இருந்தார். எனவே ஆரவ் அப்பா அருகில் இல்லாமல்தான் பிறந்தான்.

100 மதிப்பெண்ணுக்கும் மேல் கொடுப்பேன்: கர்ப்பமாக நான் இருந்தபோது என்னை அருகில் இருந்து ரவி அப்படி பார்த்துக்கொண்டார். அப்பப்போ வாமிட் செய்யும்போது அதை கையில் ஏந்தினார். இரவில் நான் எழுந்து இதை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்று சொன்னால் அவரே எழுந்து வருவார். அதற்கான ஏற்பாடுகளை செய்வார். ரவி எப்படிப்பட்ட கணவர் என்பதற்கு மதிப்பெண் கொடுக்க சொன்னால் அவருக்கு நான் 100 மதிப்பெண்ணுக்கு மேல்தான் கொடுப்பேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X