ஆர்த்திக்கு ரவி மோகன் வைத்த செக்.. செமயாக ஸ்கெட்ச் போட்டு உறவினரையே தூக்கிட்டு வந்துட்டாரு
சென்னை: ஆர்த்தியிடமிருந்து சில வருடங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்த நடிகர் ரவி மோகன்; அடுத்ததாக பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். அவர்களுக்கிடையே இருந்த உறவும் இப்போது முறிந்துவிட்டதாக தெரிகிறது. சூழல் இப்படி இருக்க இன்று செய்தியாளர்களை சந்தித்து கதறி அழுதபடி பல விஷயங்களை பேசினார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை தமிழ் சினிமா துறையிலும், ரசிகர்களிடமும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் இரண்டு பேரும் தத்தமது வழியில் சென்று கொண்டிருந்தார்கள். பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில் ஆர்த்தி இருந்தார். ரவி தன்னுடைய கரியரில் கவனம் செலுத்திக்கொண்டு கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் தன் மீது தொடர்ந்து இணையத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாகவும்; இதனால் நான் விலகுகிறேன். சென்னையை விட்டு வெளியேறுகிறேன். ரவியை சுதந்திரமாக வழியனுப்பி வைக்கிறேன் என கெனிஷா தெரிவித்திருந்தார்.

ரவி மோகனின் செய்தியாளர் சந்திப்பு: அவரது அந்த வீடியோவைத் தொடர்ந்து ஆர்த்தி ரவி தன் பங்குக்கு ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை போட்டிருந்தார். அதில் அவர், 'தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பாதீர்கள். அதுவும் தாய் சிங்கத்தை சீண்டாதீர்கள். உண்மையுடன் இந்த உலகத்தை எதிர்கொள்வேன். ஏனெனில் உண்மை எப்போதுமே வெல்லும்' என கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தார் ரவி மோகன்.
ரவியின் பேச்சு: அப்போது அவர், "அந்த (ஆர்த்தி) குடும்பமே வேண்டாம் என்று என் அப்பா, அம்மா காலில் விழுந்து கேட்டார்கள். ஆனால் அந்தப் பெண் கையை அறுத்துக்கொண்டு என்னை திருமணம் செய்துகொண்டார். எனக்கு நடந்ததே பிளாக் மெயில் திருமணம்தான். ஃபெமினிஸ்ட் என்று சொல்லும் அவர் வேலைக்கு செல்வேன் என சொல்லிவிட்டு வேலைக்கும் சென்றிருக்க வேண்டும். நான் கட்டிய வீட்டில் அவர்கள் வாழ்கிறார்கள். நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். வீட்டை விட்டு வெளியே அனுப்ப எனக்கு எவ்வளவு நேரமாகும். சொல்ல முடியாத பல அநியாயங்கள் எனக்கு நட்ந்திருக்கின்றன.
பிள்ளைகளை பார்க்கவிடவில்லை: அதேபோல் என் பிள்ளைகளையும் அவர்கள் பார்க்கவிடுவதில்லை. மகன்கள் பள்ளி படிப்புக்கு நான்தான் பணம் கட்டிக்கொண்டிருக்கிறேன். கடந்த சில வருடங்களாகத்தான் நான் நிம்மதியாக இருக்கிறேன். அது என்னுடன் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். கெனிஷாவையும் துரத்தி விட்டுவிட்டார்கள். நான் கெனிஷாவின் அழகில் எல்லாம் மயங்கிவிடவில்லை. நான் பார்க்காத அழகான ஹீரோயின்களா?.. மூன்றெழுத்து இட்லி நடிகைதான் எனது வாழ்க்கை கெடுத்தார்" என ஏகப்பட்ட விஷயங்களை கொட்டினார்.
ரவி வைத்த ட்விஸ்ட்: முக்கியமாக இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஆர்த்தியின் உறவினர் ஒருவரையும் அழைத்து வந்திருந்தார். அவர் குறித்து பேசிய ரவி, 'இவர் பெயர் பிரசாத். இவரும் அந்த குடும்பத்தில் ஒருகாலத்தில் மாப்பிள்ளையாக இருந்தார். எனக்கும் முன்னதாகவே அவர் அங்கிருந்து தப்பித்துவிட்டார். ஏற்கனவே அவர்கள் வீட்டில் (ஆர்த்தி வீடு) ஐந்து விவாகரத்துகள் நடந்திருக்கின்றன. மீண்டும் அப்படி ஒன்று நடந்துவிடக்கூடாது என்பதற்காக இவரது காலில் விழுந்தேன். ஆனால் அவரோ, 'ரவி நீ எனக்கு நல்லதுதான் செய்கிறாய். ஆனால் இது என் பெர்சனல். என்னை மன்னித்துவிடு' என சொல்லிவிட்டார். இன்று எனக்காக வந்திருக்கிறார். நான் சொன்னது உண்மையா இல்லையா என்பதை மட்டும் நீங்கள் சொல்லுங்கள் என கூற; பிரசாத்தும், 'அது உண்மைதான்' என்றார்.


Click it and Unblock the Notifications
