தமிழில் ராமானுஜராக ரீஎண்ட்ரியாகும் ‘சாக்லேட்பாய்’ அப்பாஸ்
சென்னை: ஞானராஜசேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் உலகப் புகழ்பெற்ற கணிதமேதை ஸ்ரீனிவாச ராமனுஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் ராமானுஜராக அப்பாஸ் நடிக்கிறார்.
ராமானுஜர் வேடத்தில் நடிக்க முதலில் மாதவனைதான் அணுகினார்கள். ஆனால் அவர் நடிக்காததால் சித்தார்த் நடிக்கலாம் என கூறப்பட்டது. பின்னர் கடைசியாக ஜெமினி கணேசனின் பேரனான அபிநய் நடிப்பார் எனச் சொல்லப் பட்டது.
ஆனால், தற்போது நடிகர் அப்பாஸ் ராமானுஜராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமானுஜர்...
மோகமுள், முகம், பாரதி, பெரியார் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஞான ராஜசேகரன்தான் கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுத்து வருகிறார்.

வாழ்க்கை வரலாறு....
காதல்தேசம் படம் மூலம் அறிமுகமாகி சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸுக்கு இது தமிழில் ரீஎண்ட்ரி. வாழ்க்கை வரலாறான இப்படம் மூலம் அப்பாஸின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என நம்பப் படுகிறது.

டிவி சீரியல்....
அவ்வப்போது விளம்பரங்களில் தலை காட்டி ஆச்சர்யம் கொடுத்துக் கொண்டிருந்த அப்பாஸ், சமீபத்தில் டிவி சீரியல் மூலம் தமிழில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

மலையாளப்படம்....
தற்போது தமிழ் படம் மட்டுமின்றி மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அப்பாஸ். படத்தின் பெயர் லவ் ஸ்டோரி. இயக்கம் பிரசாத்.


Click it and Unblock the Notifications











