10 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்.. அதுவும் அந்த நடிகர் படத்திலா?

சென்னை: 1992ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் "முஸ்தபா முஸ்தபா" என பாடி ஆடி ரசிகர்களை கவர்ந்து அறிமுகமானவர் தான் நடிகர் அப்பாஸ். 50 வயதை கடந்துவிட்ட அப்பாஸ் இதுவரை 52 படங்களில் நடித்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடிப்பதை முழுமையாக விட்டுவிட்டு குடும்பத்துடன் நியூசிலாந்து சென்று செட்டில் ஆன அப்பாஸ், எப்படி இருக்கிறார் பாருங்க என சில போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கின.

மீண்டும் அப்பாஸ் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், கூடிய சீக்கிரமே அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் வெளியாகும் என்பது தெரிய வந்துள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கவுள்ள அப்பாஸ் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக அந்த படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார்.

Abbas return to Tamil Cinema after 10 long years and he now started shooting in GV Prakash movie
Photo Credit:

நடிகர் அப்பாஸின் கம்பேக் அவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களை மீண்டும் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆணழகன் அப்பாஸ்: தமிழ் சினிமாவில் அஜித் குமார், பிரசாந்த் என ஏகப்பட்ட ஆணழகன் நடிகர்கள் உள்ளனர். நடிகர் அப்பாஸ் வந்த புதிதிலும் அப்படித்தான் பார்க்கப்பட்டார். காதல் தேசம் முதல் படமே அவருக்கு இன்று வரை நின்று பேசக்கூடிய படமாக உள்ளது. விஐபி, பூச்சூடவா, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம் என பல படங்களில் லீடு ரோலிலும் துணை நடிகராகவும் நடித்து தூள் கிளப்பியவர் தான் அப்பாஸ். சோலோ ஹீரோவாக அவர் நடித்த படங்கள் பெரிதாக கை கொடுக்காத நிலையில், நெகட்டிவ் ரோல்களிலும், துணை கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தினார். கடைசியாக 2014ம் ஆண்டு வெளியான ராமானுஜம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சக்கள்ளம் படம் தான் அவருடைய கடைசி படமாக உள்ளது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி: 2015ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவே வேண்டாம் என குடும்பத்துடன் வெளிநாட்டுக்குச் சென்று செட்டில் ஆகிவிட்டார் அப்பாஸ். இந்நிலையில், இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், கெளரி பிரியா நடிப்பில் கிராமத்தை மையமாக வைத்து காமெடி படமாக உருவாகி வரும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார். ஹீரோயினின் அப்பாவாக நடித்து வருகிறாரா? அல்லது இவர் தான் ஜி.வி. பிரகாஷுக்கு மெயின் வில்லனா? என்பது குறித்த தகவல்கள் விரைவில் தெரியவரும் என்கின்றனர். இப்போதைக்கு பொள்ளாச்சியில் செம காமெடி படமாக இந்த படம் உருவாகி வருவதாக மட்டுமே இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகைகள் அதிகம்: ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த அப்பாஸ்க்கு இன்னமும் ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர். "என்னை காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு" என வினீத் மற்றும் அப்பாஸ் தபுவை காதலிக்கும் காட்சிகளும் பாடல்களையும் பார்த்ததில் இருந்தே பலரும் அப்பாஸ் ரசிகைகளாக மாறிவிட்டனர். "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என ஆனந்தம் படத்தில் சினேகா அப்பாஸை காதலித்து பாடும் பாடலுக்கும் இன்று வரை ரசிகர்களும் ரசிகைகளும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அப்பாஸ் நடிக்க வந்து ஒரு கலக்கு கலக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X