Abbas - நமக்கு பிறந்த மகன்தானா அவன்.. சந்தேகப்பட்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த அப்பாஸ்.. ஷாக் தரும் நியூஸ்

சென்னை: நடிகர் அப்பாஸ் 90களில் சினிமாவுக்குள் வந்து 2000களின் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்தார். அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல் ஹாசனுடன் பம்மல் கே சம்பந்தம், ரஜினியுடன் படையப்பா என முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். முக்கியமாக பெண் ரசிகைகளை அதிகம் கொண்டிருந்த அவர் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென பட வாய்ப்புகள் குறைந்துபோக ஆள் காணாமல் போனார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டவர் அப்பாஸ். மிர்சா அப்பாஸ் அலி என்ற இயற்பெயர் கொண்ட அவர் நடிகர் ஃபெரோஸ் கானுக்கு ஒருவகையில் சொந்தம் ஆவார். சினிமாவின் ரத்தம் அப்பாஸுக்குள் ஓடியதாலோ என்னவோ அவருக்கு மாடலிங் மேல் ஆசை வந்தது. அதன்படி 1994ஆம் ஆண்டு Face of Bangalore என்ற டைட்டிலை தட்டி சென்றார் அப்பாஸ். அதனையடுத்து அவருக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் ஏற்பட சினிமா வாய்ப்பு அவரை தேடி வந்தது. முதன்முதலாக தமிழில் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார்.

Abbas took a DNA test suspecting that it was his son here are the details

முதல் படமே செம பெயர்: 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படம் மெகா ஹிட்டானது. ஒரு பெண்ணை இரண்டு இளைஞர்கள் காதலிப்பது என்ற ஒன்லைனை வைத்து கதிர் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். அதில் அப்பாஸின் அழகும், நடிப்பும் யார் இவர் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான என்னை காணவில்லையே பாடலிலும், முஸ்தஃபா முஸ்தஃபா பாடலிலும் வினித்தைவிடவும் அப்பாஸ் அதிகம் ஸ்கோர் செய்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

தொடர் வாய்ப்புகள்: முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அப்பாஸுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. விஐபி, பூச்சூடச்வா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, ஆசைத்தம்பி, பூவேலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் அப்பாஸின் அழகும், நடிப்பும் தொடர்ந்து கவனம் ஈர்த்துக்கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது நடிப்பை சிறந்த முறையில் வெளிப்படுத்தினார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: அந்தப் படத்தில் அப்பாஸின் வேடமும் கவனம் ஈர்த்ததன் காரணமாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஐஸ்வர்யா ராயை காதலித்து சூழ்நிலை காரணமாக அந்தக் காதலை பிரியும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். பிறகு கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். முக்கியமாக மின்னலே படத்தில் தனது மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி அசால்ட்டாக அப்ளாஸை அள்ளியிருந்தார்.

காணாமல் போன அப்பாஸ்: இப்படி முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கியமான ரோல்களை ஏற்றுவந்த அப்பாஸ் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தார். மேலும் பெண் ரசிகைகளையும் ஏராளமாக கொண்டிருந்தார் அவர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. கடைசியாக 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சக்கள்ளம் படத்தில் நடித்தார். அதன் பிறகு வெளிநாட்டுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவது உள்ளிட்ட வேலைகளை செய்துவந்த அவர் தற்போது மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

அப்பாஸ் பேட்டி: மேலும் பேட்டிகளையும் அளித்துவரும் அவர்; சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "எனது மூத்த மகன் ரொம்பவே அமைதியானவர். நான் அவர் வயதில் இருக்கும்போது ஏகப்பட்டகூத்துக்களையும், கலாட்டாக்களையும் செய்திருக்கிறேன். ஆனால் அவரோ அப்படி கிடையாது. அதனால் அவர் என்னுடைய மகன்தானா என்று ஆச்சரியமாகவும் இருந்தது சந்தேகமாகவும் இருந்தது. எனவே டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்து அவர் என்னுடைய மகன்தான் என்று சொன்னார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X