நான், உதய் சோப்ரா இல்லாமல் தூம் படம் இல்லை: அபிஷேக் பச்சன்

By Siva

மும்பை: தூம் 3 படம் என்னுடையது, அதன் ஹீரோ நான் தான் என்று இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

தூம், தூம் 2 மற்றும் தூம் 3 ஆகிய படங்களில் போலீஸ்காரராக நடித்து வந்துள்ளார் அபிஷேக் பச்சன். முதல் படத்தில் ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்தார். தூம் 2ல் ரித்திக் ரோஷன் வில்லனாக நடித்தார். இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள தூம் 3 படத்தில் ஆமீர் கான் வில்லனாக நடித்துள்ளார்.

படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஆமீர் கான், கத்ரீனா கைஃபுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அபிஷேக் பச்சனுக்கு தனக்கு முக்கியத்துவம் அளிக்காதது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது போன்று.

என் படம்

என் படம்

தூம் என் படமாக்கும். நான் தான் படத்தின் ஹீரோ. அதை யாரும் என்னிடம் இருந்து எடுக்க முடியாது. நீங்கள் பெரிய அல்லது சிறிய ஸ்டாராக இருக்கலாம். ஆனால் தூம் ஜெய் மற்றும் அலியை பற்றியது என்று அபிஷேக் தெரிவித்தார்.

ஜெய், அலி

ஜெய், அலி

தூம் படங்களில் அபிஷேக் ஜெய் தீக்சித்தாகவும், உதய் சோப்ரா அலி அக்பராகவும் நடித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அபிஷேக் கூறுகையில், ஜெய் மற்றும் அலி கதாபாத்திரங்கள் இல்லை என்றால் தூம் படம் இல்லை என்றார்.

எங்கு அழைத்தாலும்

எங்கு அழைத்தாலும்

படத்தின் விளம்பர யுக்திகளை நான் ஒன்றும் பரிந்துரைக்கவில்லை. இது என் படம். என்னை எங்கு வரச் சொன்னாலும் நான் வருவேன் என்று அபிஷேக் தெரிவித்துள்ளார்.

தூம்

தூம்

தூம் படத்திற்கு எந்த ஸ்டார்களும் தேவையில்லை. படத்திற்கு ஆமீர், நான் மற்றும் உதய் தேவையில்லை. புதுமுகங்களை போட்டாலும் படம் நிச்சயம் ஹிட்டாகும் என்றார் அபிஷேக்.

ஒதுக்குகிறார்களா?

ஒதுக்குகிறார்களா?

என்னை ஒதுக்குகிறார்கள் என்று நான் ஏன் நினைக்க வேண்டும். படத்தில் இருந்து என்னை பிரிக்க முடியாது. இது யாருடைய படம் என்று ரசிகர்கள் பார்ப்பதில்லை. இந்நாள் வரை சிறந்த படமாக உள்ள அமர் அக்பர் அந்தோணியில் என் அப்பா, வினோத் கன்னா, ரிஷி கபூர் மற்றும் பிறர் நடித்திருந்தனர். அது அனைவருடைய படமாகும் என்று அபிஷேக் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X