மீண்டும் ஒரு பள்ளிப்பருவ காதல் படம்.. பிரேமலு மாதிரி ஹிட் அடிக்குமா? ‘வித் லவ்’ டிரைலர் வந்துடுச்சு!

சென்னை: செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் மகேஷ் ராஜ் இணைந்து தயாரித்துள்ள 'வித் லவ்' படத்தின் டிரைலரை இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், செளந்தர்யா ரஜினிகாந்த், ராணா டகுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கி கடந்த ஆண்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை குவித்த அபிஷன் ஜீவிந்த் தனது உதவி இயக்குநர் மதன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள படம் தான் 'வித் லவ்'. வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Abishan Jeevinth and Anaswara Rajan s With Love trailer out now

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க தனுஷ் நடித்த 3 திரைப்படம் போல தமிழ் சினிமாவில் பல பள்ளிப்பருவ காதல் படங்கள் வெளியான நிலையில், அந்த வரிசையில் மீண்டும் ஒரு பள்ளிப்பருவ காதல் படமாக இந்த வித் லவ் உருவாகியுள்ளது.

ஹீரோவான டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்: அபிஷன் ஜீவிந்த் தனது முதல் படத்திலேயே பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்று அசத்திய நிலையில், பிரதீப் ரங்கநாதன் போல அடுத்து ஹீரோவாகவும் முடிவெடுத்து விட்டார். பள்ளி மாணவனாகவும் வேலைக்குச் செல்லும் இளைஞனாகவும் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

Abishan Jeevinth and Anaswara Rajan s With Love trailer out now

வித் லவ் கதை இதுதான்: பள்ளியில் இஸ்லாமிய பெண்ணை ஹீரோ காதலிக்க, ஹீரோயின் அனஸ்வரா ராஜன் வேறு ஒரு பையனை காதலிக்கிறார். பல வருடங்கள் கழித்து அனஸ்வரா ராஜனை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கும் இடத்தில் அவர் தங்களது பழைய எக்ஸ் லவ்வர்களை நினைவுப்படுத்தி அவர்களை தேடிப் பிடித்து திருமணம் செய்யலாமா? என ட்விஸ்ட் கொடுக்க இருவரும் சேர்ந்து தேடிப் பிடித்தார்களா? இல்லையா? இருவரும் எப்படி இணைந்தார்கள்? என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என்பதை டிரைலர் தெளிவாக விளக்கியுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி மேஜிக் நடக்குமா?: ஏகப்பட்ட பள்ளிப் பருவ காதல் படங்கள் வெளியாகி உள்ள நிலையில், வித்தியாசமான காதல் கதையாக இந்த படம் இருக்குமா? டூரிஸ்ட் ஃபேமிலி பாக்ஸ் ஆபீஸில் நடத்திய மேஜிக்கை நடத்துமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே படத்தை சில இடங்களில் டிரைலர் நினைவுப் படுத்துகிறது. அடுத்த வாரம் படம் வெளியானதும் எப்படி இருக்கு என்பதும் பிப்ரவரி மாதம் தியேட்டர்களை இந்த படம் காப்பாற்றுமா என்பதும் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X