கன்னத்தை கடிக்கணும்.. அனஸ்வராவை கட்டிலில் தள்ளிட்டு படுக்கிறீங்க.. வித் லவ் ’அவள் வருவாளா’ அலப்பறை!

சென்னை: 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிப் பெற்ற 'வித் லவ்' படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் சூர்யாவின் "அவள் வருவாளா" பாடல் காட்சி உருவாக்கப்பட்ட விதத்தை அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 3 மாதங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்கள் வெளியாகி வருகின்றன. தலைவர் தம்பி தலைமையில் படத்தைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் வெளியான வித் லவ் திரைப்படமும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து காதலர் தின ஸ்பெஷலாக மாறி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது.

Abishan Jeevinth shares With Love Intimacy scene with Anaswara Rajan rehearsal clips

தாய் கிழவி, யூத் படங்கள் வித் லவ் படத்தை விட அதிக வசூலை ஈட்டினாலும், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே அவருக்கு அனஸ்வரா ராஜன் உடன் செம கெமிஸ்ட்ரியான காட்சிகள் வைக்கப்பட்டன.

அவள் வருவாளா: சூர்யா நடித்த நேருக்கு நேர் பட "அவள் வருவாளா" பாடல் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களில் ஒன்று. அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான வித் லவ் படத்தில் இயக்குநர் மதன் அந்த பாடலை வைத்த விதம் ஒட்டுமொத்த தியேட்டரையே பிளாஸ்ட் ஆக்கிவிட்டது. சிலர், அந்த பாடல் காட்சி தேவையற்ற திணிப்பு என்று சொன்னாலும், கமர்ஷியல் ரீதியாக அது சரியாகவே ஒர்க்கவுட் ஆகியிருந்தது.

அனஸ்வரா கன்னத்தை கடிக்கணுமா?: எந்தவொரு காட்சியும் உருவாக்கப்படுவதற்கு முன்பாக டிஸ்கசன்ஸ் மற்றும் ரிஹர்சல் பார்க்கப்படும். முதன் முதலாக படத்தின் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் எல்லாம் சேர்ந்துக் கொண்டு அபிஷன் ஜீவிந்திடம் அனஸ்வரா ராஜனை நீங்க இப்படித்தான் கட்டிலில் தள்ளி படுக்க வைக்கிறீங்க என்றும் அனஸ்வரா உங்க கன்னத்தை கடிப்பார் என்றும் சொல்ல, அடப்பாவீங்களா, கன்னத்தை கடிக்கணுமா? என்னடா பண்றீங்க என அபிஷன் ஜீவிந்த் புலம்பித் தள்ளும் வீடியோ அலப்பறை காட்சிகள் வெளியாகி உள்ளன.

அடுத்த படம் என்ன?: இயக்குநராக அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. ஹீரோவாக அவர் அறிமுகமான வித் லவ் திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில், அடுத்து அபிஷன் ஹீரோவாக நடிக்கப் போறாரா? அல்லது அவர் இயக்கத்தில் படம் வருமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X